தமிழ் சினிமா அசால்டாக 400 முதல் 500 கோடிகளில் நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறது. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு அது லாபத்தை கொடுக்கிறதா என்பது இன்றுவரை ஒரு புரியாத புதிராக இருக்கிறது. அப்படி 2024 இல் முதல் 5 படங்களில் வசூல் விவரம்,
கோட்: வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவான இந்த படம் 400 கோடிகளில் தயாரிக்கப்பட்டது. ஏஜிஎஸ் நிறுவனம் தான் இதற்கு காட் பாதர். இது 440 கோடிகள் வசூலித்து லாபகரமாகவே அமைந்தது.
அமரன்: சிவகார்த்திகேயன் கேரியரில் இதுதான் பெத்த வசூலை கொடுத்துள்ளது. ராஜ்கமல் நிறுவனத்தால் 200 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 320 கோடிகள் வசூலித்தது.
வேட்டையன்: எப்பொழுதுமே ரஜினி படங்களுக்கு ஒரு தனி வசூல் இருக்கும் ஆனால் இந்த முறை வேட்டையன் படம் 260 கோடிகள் மட்டுமே வசூலித்தது.
ராயன்: சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்தது. தனுஷ் இயக்கி நடித்த இந்த படம் 165 கோடிகள் வசூலித்தது. இதனால் சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து தனுஷ் படங்களை தயாரிக்க ஆவலாக இருக்கிறது.
மகாராஜா: விஜய் சேதுபதியின் கேரியர் அதல பாதாளத்துக்கு செல்லும்போது அவருக்கு புது தெம்பு கொடுத்தது மகாராஜா படம் தான்.சுமார் 150 கோடிகள் வசூலித்து வேற லெவலில் விஜய் சேதுபதியை தூக்கி நிறுத்தியது..