Bigg Boss Tamil 8: பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கமல் மாறி யாராலும் வர முடியாது, அதிலும் விஜய் சேதுபதி தப்பை தட்டி கேட்காமல் பூசி முழுவி போட்டியாளர்களை பேசவும் விடாமல் சொதப்புகிறார் என்று பல குற்றச்சாட்டுகள் வந்தது. ஆனால் அதற்கு எல்லாத்துக்கும் பதில் கொடுக்கும் விதமாக தற்போது வந்த பிரமோ மக்களை மகிழ்வித்துவிட்டது.
அதாவது இத்தனை நாளாக பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு டீம் ஆக நண்பர்கள் என்ற முகமூடியை போட்டு விளையாடி வந்த கோவா டீமை சம்பவம் செய்ய விஜய் சேதுபதி தயாராகி விட்டார். அதாவது கடந்த வாரத்தில் டெவில் மற்றும் ஏஞ்சல் டாஸ்க் நடைபெற்றது.
இதில் ஜாக்லின் மற்றும் சௌந்தர்யா மொத்த கேமையும் கெடுக்கும் விதமாக ரொம்பவே நாங்க நல்லவங்க, எங்களால் மத்தவங்களை கஷ்டப்படுத்த முடியாது. எங்களுக்கு அது தெரியவும் தெரியாது, அப்படி விளையாடுவதும் எங்களுக்கு பிடிக்காது என்று ஒரு முகமூடியை போட்டு விளையாடுபவர்களையும் கெடுத்து தானும் விளையாடாமல் சுவாரசியத்தை குறைத்து விட்டார்.
இதனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் மொத்த பேரும் சேர்ந்து தற்போது கோவா டீமை குற்றவாளி போல் நிறுத்தி விட்டார்கள். அதே மாதிரி வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கும் ஜாக்லின் மற்றும் சௌந்தர்யாவின் விளையாட்டு எரிச்சலை ஏற்படுத்தும் அளவிற்கு தான் இருந்தது.
இதற்கு மொத்தமாக கேள்வி கேட்கும் விதமாக விஜய் சேதுபதி விட்டுக் கொடுத்து விளையாடுவதாக இருந்தால் நீங்கள் உள்ளே இருக்க வேண்டிய அவசியமே இல்லை. தயவு செய்து கதவை திறந்து வைக்கிறேன் வெளியே வந்து விடுங்கள். நண்பர்கள் என்ற போர்வையில் உள்ளே உட்கார்ந்து மற்றவர்கள் விளையாட்டை கெடுக்காதீர்கள் என்று சொல்லி கோவா கேங்கை தனியாக உட்கார வைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார்.
கடைசி நேரத்தில் மேனேஜராக வந்த மங்களம் வாத்தியாரும் இதில் தெரியாமல் அம்புட்டு கிட்டேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறுவது போல் ரஞ்சித் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். இதற்கு இடையில் அருணும் இந்த கோவா டீமுக்கு வெளியே ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களுடன் சேர்வதற்கு முயற்சி எடுத்தார்.
கடைசியில் விஜய் சேதுபதி வச்சு வாங்கியதும் எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்று ஒதுங்கிக் கொள்ளும் அளவிற்கு கோவா டீமுக்கு எதிராக மாறி சாட்சி சொல்ல ஆரம்பித்து விட்டார். இதையெல்லாம் தொடர்ந்து இன்று சிறப்பான சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகுது தர்ஷிகா தான்.