Thalapathy Vijay: நடிகர் விஜய் நேற்று கலந்து கொண்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியலையே புரட்டி போட்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய தலைவர் ஆதவ் அர்ஜுனா பொறுப்பில் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது நிகழ்ச்சியில், சிறப்புரையாற்றியவர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பல வருடங்களாக திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் நிலைமையில் ஆதவ் அர்ஜுனா நேற்று முழுக்க முழுக்க திமுக கட்சியை விமர்சித்து பேசி இருந்தார்.
பிரபலம் சொன்ன புது அரசியல் கணக்கு
இந்த நிலையில் இது குறித்து திருமாவளவன் பேசுகையில், ஆதவ் அர்ஜுனாவிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்படும் என சொல்லி இருக்கிறார்.
பல வருடங்களாக கூட்டணியில் இருக்கும் திமுக கட்சியை பற்றி இப்படி விமர்சித்தும் விளக்கம் மட்டும் கேட்கப்படும் என திருமாவளவன் பேசியிருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வலைப்பேச்சு சேனல் பிஸ்மி பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அதாவது இது மொத்தமும் திருமாவளவனுக்கு தெரிந்த தான் நடக்கிறது என்பது போல் பிஸ்மி சொல்லி இருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் விஜயை கலந்து கொள்ள வைத்தது திமுகவுக்கு நடுக்கம் வர வைக்க தான்.
இந்த நிகழ்ச்சியை ஆதவ் அர்ஜுனா முழுக்க முழுக்க தன்னுடைய செலவில் நடத்தி முடித்து இருக்கிறார். அதாவது புத்தகம் விற்று வரும் லாபத்தை விட இரண்டு மடங்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழக கட்சிக்கு நடுவே இப்படி ஒரு விஷயம் போய்க் கொண்டிருப்பது தமிழக மக்களுக்கும், திமுக கட்சிக்கும் தெரிய வேண்டும்.
2026 தேர்தலின் போது இதை சுட்டிக்காட்டி திருமாவளவன் கூட்டணிக்காக ஒன்று பணமாகவோ, அல்லது ஏதாவது ஒரு பதவியை வாங்கவோ திட்டமிட்டு இருப்பதாக பிஸ்மி கூறியிருக்கிறார்.