Pushpa 2 Collection: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் சக்கை போடு போட்டு வருகிறது.
முதல் நாள் சிறப்பு காட்சியில் நடந்த கூட்ட நெரிசலில் ஒரு பெண் பலியானார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.
அதனால் தெலுங்கானா அரசு இனி சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என அறிவித்தது. இது ஒரு பக்கம் இருக்க படம் முதல் நாளிலேயே 294 கோடிகளை வசூலித்திருந்தது.
2 நாள் பாக்ஸ் ஆபீஸ் கலக்சன் ரிப்போர்ட்
அதை அடுத்து இரண்டாவது நாளிலும் படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. இந்த இரு நாட்களும் சேர்த்த மொத்த வசூல் 449 கோடிகளாக இருக்கிறது.
உலக அளவில் இரண்டே நாளில் இப்படி ஒரு சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது. அதை அடுத்து வார இறுதி நாளில் இதன் வசூல் இன்னும் உயரும் என தெரிகிறது.
அதனால் கூடிய விரைவில் படம் ஆயிரம் கோடியை வசூலித்து விடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் 400 கோடி வரை வசூலித்தது.
அதனாலேயே இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது அந்த வசூலை இரண்டே நாளில் முறியடித்திருக்கிறது இந்த பாகம்.