சல்மான் கானை காதலித்து பிரிந்த நிலையில், விவேக் ஒபராயை காதலித்தார் ஐஸ்வர்யா ராய். விவேக் ஓபராயுடன் க்யுன் ஹோ கயா நா படத்தில் நடித்தபோது ஐஸ்வர்யா ராய்க்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் பாலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். திடீரென்று இருவருக்கும் பிரேக் அப் ஆனது.
இரண்டு காதல்களும் பிரேக் அப் ஆனபின், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய்.
ஐஸ்வர்யா ராயுடனான காதல் பிரேக் அப் பற்றி பேசிய விவேக் ஓபராய்
இப்போது, விவேக் ஓபராய், “ஐஸ்வர்யா ராய் பற்றியும் அவருடனான காதல் பிரேக் அப் பற்றி பேசியுள்ளார். அதில், பாப்புலராக இருப்பதால் லவ் பிரேக் அப் உடனே வெளியில் பரவி விடும்.
அந்த உறவில் இருந்து நான் ரொம்ம தூரம் வந்துவிட்டேன். காதல் தோல்வி சமயத்தில் இறைவன் என் கோரிக்கைகளை கேட்கவில்லை.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனக்கு ஏற்க துணையை கடவுள் கொடுத்திருக்கிறார். நானும் மகிழ்ச்சி, ஐஸ்வர்யா ராயும் மகிழ்ச்சியாக உள்ளார்.
உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒருவர் விலகினால், புதிய துணை உங்களுக்கு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.