விஜய் தவெக கட்சியைத் தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அக்டோபர் 27 ஆம் தேதி முதல் மாநாட்டை நடத்தினார். டிசம்பர் 6 ஆம் தேதி எல்லோருக்குமான் தலைவர் என்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.
இவ்விழாவில் விசிக தலைவர் திருமாவளவன், நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர். விகடன் நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் திராவிட கட்சிகளுக்கும், திமுகவுக்கும் எதிராக பேசினார்.
மேலும், திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கூட்டணி அழுத்தத்ததால் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று விஜய் பேசினார். அதற்கு அப்படியில்லை என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்தார். இதுபற்றி, துணை முதல்வர் உதயநிதியிடம் கேட்கப்பட்டது.
சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை என உதயநிதி முடித்துக் கொண்டார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த தவெக
தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி பேசியது;
“சினிமா செய்தியை சினிமாக்காரர், சினிமா தயாரிப்பாளர், சினிமா விமர்சகர், அண்ணன் உதயநிதி ஸ்டாலின் பார்க்காமல் இருப்பது அதிர்ச்சியாகவும், நகைப்பாகவும் உள்ளது. அமரன் படத்தை குடும்பத்தோடு பார்த்தது யார் என்று கூற முடியுமா?” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
திமுகவை தவெக தலைவர் சீண்டியிருந்த நிலையில், அக்கட்சி நிர்வாகிகளும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.