Adhav Arjun: சமீபத்தில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு எல்லாருக்கும்மான தலைவர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
அப்போது அவர் ஆளும் கட்சியினர் குறித்த பல கருத்துக்களை பேசினார். அதேபோல் விசிக கட்சியின் ஆதவ் அர்ஜுன் அடுத்த தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
இதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. விரைவில் ஆதவ் அர்ஜுன் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என்று கூட பேசப்படுகிறது.
அதேபோல் திருமாவளவன் அவருடைய பேச்சு குறித்து வெளிப்படையான கருத்தையும் முன்வைக்கவில்லை. இந்நிலையில் சவுக்கு சங்கர் ஒரு விஷயத்தை பதிவு செய்துள்ளார்.
திருமாவுக்கு வந்த நெருக்கடி
அதாவது இன்றைக்குள் ஆதவ் அர்ஜுன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட்டு நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது.. ஏனென்றால் திருமாவளவனுக்கு முதல்வரிடம் இருந்து ஒரு உத்தரவு வந்திருக்கிறது.
ஆதவ்வை கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார். அதன் எதிரொலிதான் இந்த நடவடிக்கை.
விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.. அப்படி இருந்தால் நிச்சயம் ஆதவ் விஜய்யுடன் இணைவார் என்ற கருத்தும் இப்போது பரவி வருகிறது.