செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஜீவா விஷயத்தில் மாட்டிக் கொள்ளப் போகும் ரோகிணி.. முத்துவுக்கு கிடைக்கும் ஆதாரம், ஏமாற்றத்தில் மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் மற்றும் ரோகினி வீட்டுக்கு வந்ததும் அனைவரது முன்னாடியும் சந்தோஷ் சார் மூலம் 10 லட்ச ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இதனால் அந்த லாபத்தில் இருந்து விஜயாவுக்கு இரண்டு வளையல்களை வாங்கிட்டு வந்து ரோகினி போட்டு விடுகிறார்.

சும்மாவே மனோஜ் ரோகிணியை தலையில் தூக்கி வைத்து ஆடும் விஜயாவிற்கு தற்போது தங்கத்தினால் வளையல் கொடுத்ததால் அப்படியே பூரித்து போய்விட்டார். உடனே இவர்கள் தான் எனக்கு பெருமை சேர்க்க போகிறார்கள். படிப்படியாக முன்னேறி ஜெயித்து காட்டப் போகிறார்கள் என்று பெருமை பேச ஆரம்பித்து விட்டார்.

அத்துடன் மனோஜ் இன்னொரு சந்தோஷமான விஷயமும் இருக்கிறது என்று சொல்லி ECR இல் ஒரு வீடு வருகிறது. அதையும் நாங்கள் வாங்க முடிவு பண்ணி இருக்கிறோம் என்று சொல்லிய நிலையில் விஜயா தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்து விட்டார். அப்பொழுது முத்து சந்தோஷம் ஆனா அப்பாவுக்கு எதுவும் வாங்கிட்டு வரலையா என்று கேட்கிறார்.

அதற்கு ஒரு வேட்டி சட்டையை வாங்கிட்டு வந்து அண்ணாமலை இடம் கொடுத்து விடுகிறார். அடுத்ததாக மீனா மொட்டை மாடியில் நின்று ஒரு ரூம் கட்டுவதற்காக அடுக்கி வைத்திருந்த செங்கலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அங்கே வந்த முத்து, நீ என்ன யோசிக்கிறாய் என்று எனக்குத் தெரிகிறது. மனோஜ் ஒரு வீடு வாங்கி பிசினஸ் பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

நம்மளால் ஒரு ரூம் கூட கட்ட முடியல என்று தானே யோசிக்கிற என கேட்கிறார். அதற்கு மீனா நான் ஏன் அப்படி யோசிக்க போறேன். அவங்க வளர்ந்து வந்து ஜெயித்தால் எனக்கு சந்தோஷம்தான். இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கும் இந்த குடும்பத்தில் இருந்து ஒவ்வொருவரும் போய் விட்டார்கள் என்றால் மாமா கஷ்டப்படுவார்கள் என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என சொல்கிறார்.

அடுத்ததாக முத்து அதையெல்லாம் சமாதானமாக பேசிவிட்டு, ஒருவேளை ரோகிணி மனோஜ் அப்படி போய்விட்டார்கள் என்றால் நாம் ரூம் கட்டுவதற்கான தேவையே இருக்காது. அவங்க ரூம் நமக்கு கிடைச்சிடும் என்று அல்பத்தனமாக சொல்கிறார். அடுத்ததாக அண்ணாமலை வேலையில் சேர்வதற்கு கிளம்பி விட்டார்.

இதற்கு முத்து வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தாலும் மற்றவர்கள் எல்லாரும் அண்ணாமலையை ஊக்கப்படுத்தி பேசியதால் முத்து ஸ்கூலில் அப்பாவை ட்ராப் பண்ணுவதற்கு போய்விட்டார் . இவர்கள் அங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சியான ரோகினி வீட்டிற்கு வந்து அம்மாவிடம் புலம்புகிறார். கிரிஷ் யார் கண்ணிலும் மாட்டியிடக் கூடாது என்பதற்காகத்தான் சென்னையில் இருந்து ரொம்ப தூரமாக ஒரு வீட்டை பார்த்து ஸ்கூலில் சேர்த்து விட்டேன்.

ஆனால் இப்பொழுது அதே ஸ்கூலில் தான் மனோஜ் அப்பாவும் வேலையில் சேர்ந்து இருக்கிறார். என்ன பண்ணுவது என்று தெரியவில்லை என புலம்புகிறார். உடனே ரோகிணி அம்மா, இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்லை உன்னுடைய ரகசியங்களை வீட்டில் சொல்லி மன்னிப்பு கேட்டு விடு என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி அப்படியெல்லாம் பண்ணிட்டால் என்னை வீட்டிலேயே சேர்த்துக்க மாட்டாங்க.

இந்த பிரச்சனையை நானே சமாளித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் ஓவராக ஆடிவரும் மனோஜ் மற்றும் ரோகினிக்கு ஆப்பு வைக்கும் விதமாக கனடாவில் இருந்து ஜீவா வருகிறார். ஜீவாவுக்கு இங்கே தெரிந்த ஒரே நபர் என்றால் அது முத்து தான். அந்த வகையில் முத்துவும் ஜீவமும் சந்திக்கும் பொழுது ரோகினி மற்றும் மனோஜ் பற்றிய விஷயங்கள் வெளிவரப் போகிறது.

அப்பொழுது திருப்பி 30 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்ட விஷயமும் வரும். அதன் மூலம் தான் அவர்கள் இருவரும் சேர்ந்து ஷோரும் ஆரம்பித்து இருக்கிறார்கள். அது அப்பாவுடைய பணம், அதை திருப்பிக் கொடுக்காமல் இந்த பார்லர் அவங்க அப்பா கொடுத்தது என்று பொய் சொல்லி கடையை ஆரம்பித்து விட்டார் என்று எல்லா உண்மையும் முத்து தெரிந்து கொண்டு வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லப் போகிறார்.

இதுதான் ரோகினி மாட்டுப் போகும் முதல் விஷயமாக இருக்கப் போகிறது, இதனை தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயத்திலும் மாட்டிக் கொண்டு முழிக்க போகிறார்.

Trending News