செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஆனந்தியை ஏற்றுக் கொள்ளும் மகேஷின் அம்மா, அன்புவின் வாழ்க்கையில் என்ட்ரி கொடுக்கும் துளசி.. பரபரப்பில் சிங்கப்பெண்ணே

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. சிங்க பெண்ணே என்ற டைட்டிலை வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க முக்கோண காதல் கதையை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் என்ற பெரிய குற்றச்சாட்டு இருந்தது.

தற்போது அதை மொத்தமாக தகர்த்து இருக்கிறார். ஆமாம் இனிமேல் முக்கோண காதல் கதை இல்லை இது, நான்கு பக்க காதலாக மாற இருக்கிறது.

அன்பு தான் அழகன் என்று தெரிந்த பிறகு ஆனந்தியின் வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோஷம் கிடைத்திருக்கிறது.

அன்புவின் வாழ்க்கையில் என்ட்ரி கொடுக்கும் துளசி

ஆனந்தி அன்பு வை விட அவள் தான் அவனை ரொம்பவும் அதிகமாக விரும்பி கொண்டிருக்கிறாள். மகேஷ் சார் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுத்து விடக் கூடாது என்ற பயத்தில் காதல் விஷயத்தை அன்பு மறைத்து வைத்திருக்கிறான்.

இதனால் மகேசுக்கு ஆனந்தி மீதான காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. அன்பு தனக்காக வீட்டை விட்டு வெளியே வந்ததை ஆனந்தியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இது எப்படியோ மகேசுக்கு தெரிந்து அன்புவின் அம்மாவிடம் நேரடியாக வந்து பேசுகிறான்.

அதற்கு அன்புவின் அம்மா என்னுடைய பையன் ஆனந்தியை காதலிச்சிடுவானோன்னு எனக்கு பயமா இருக்குது. அவன் கிட்ட பேசி துளசியை கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க என சொல்லுகிறார்.

மகேஷும் அன்பு விடம் நடந்ததை சொல்லி, நீ எதுக்கும் பயப்படாத உன்ன உன் காதலை கூட சேர்த்து வைக்கிறேன் என வாக்குறுதி கொடுத்துவிட்டு செல்கிறான்.

இதையெல்லாம் பார்க்கும் போது இன்னும் சில வாரங்களில் சிங்க பெண்ணே சீரியலில் துளசி என்ட்ரி கொடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஒரு பக்கம் ஆனந்தியை மகேஷ் உறுதி உறுதி காதலிக்க, தற்போது கல்யாண கனவோடு உள்ளே நுழைய இருக்கிறாள் துளசி.

இன்னொரு பக்கம் மகேசின் அம்மா நாம் ஆனந்தியை எதிர்க்கும் வரை அவனுக்கு எதிரியாக தான் நாம் தெரிவோம். ஆனந்தியை சேர்ப்பது போல் ஆதரவு தெரிவித்து விட்டு வேறொரு வழியில் மகேஷ் ஆனந்தியை வெறுக்குமாறு திட்டம் போட மித்ராவுடன் சேர்ந்து கூட்டு சதி போட்டு காத்திருக்கிறார். ஒரு வேலை இந்த துளசி மகேஷுக்கு ஜோடியாகவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News