செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

வெண்ணிலா வந்த பிறகு ரெண்டு விஷயத்தில் சொதப்பிய விஜய்.. காவேரி மாதிரி பேசி விரிசலை ஏற்படுத்திய ராகினி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் விட்டதால் காலையில் நல்ல அசந்து தூங்கி விட்டார். இதனால் காவிரியை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று விஜய், வெண்ணிலாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகிறேன், என்கூட பக்கபலமாக கடைசி வரை இருக்க வேண்டும். நீ தான் என்னுடைய பொக்கிஷம் ஐ லவ் யூ என்று சொல்லி கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு போய்விட்டார்.

இந்த கடிதத்தை பார்த்த ராகினி அதை கிழித்து தூர போட்டு காவிரிக்கு தெரியாதபோல் நடந்து கொண்டார். பிறகு காவிரி எழுந்ததும் வெண்ணிலா மற்றும் விஜய்க்கு காபி போட்டு கொண்டு வந்து வீடு முழுவதும் தேடிப் பார்க்கிறார். அவர்கள் இருவரும் இல்லை என்றதும் விஜய்க்கு போன் பண்ணுகிறார். ஆனால் விஜய் காரில் போகும்போது ஒரு சின்ன விபத்து ஏற்பட்டதால் போனை கட் பண்ணி விடுகிறார்.

இதனால் பயந்து போன காவிரி என்ன பண்ணுவது என்று தெரியாமல் ஃபோனை அந்த இடத்தில் வைத்துவிட்டு அம்மா வீட்டுக்கு போய் விட்டார். அங்கே போனதும் கங்காவிடம், யமுனா எங்கே என்னிடம் சொல்லாமலே போயிட்டாளா என்று கேட்கிறார். உடனே காவிரி அம்மா, யமுனா இங்கே வந்தது கூட எனக்கு தெரியாது என்று கேட்ட நிலையில் கங்கா, யமுனா பேசிக் கொண்டிருக்கும் போது நவீன் வந்து கூட்டிட்டு போய்விட்டார் என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

இதற்கிடையில் விஜய், காவேரியிடம் பேசுவதற்காக போன் பண்ணுகிறார். ஆனால் காவேரி அங்கே இல்லாததால் ஃபோன் மட்டும் ரிங் ஆகி கொண்டிருப்பதை பார்த்த ராகினி அட்டென்ட் பண்ணி பேசுகிறார். அப்பொழுது விஜய் பேசுவது என்னவென்றால் வெண்ணிலாவே கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு வந்து இருக்கிறேன். வரும் வழியில் ஒரு சின்ன விபத்து அதனால்தான் உன்னிடம் பேச முடியாமல் போனை கட் பண்ணி விட்டேன் என்று நடந்த விஷயங்களை சொல்கிறார்.

அதற்கு ராகினி, காவேரி மாதிரி பேசுவது போல் குரலை மாற்றிக் கொண்டு பேசியதால் விஜய் அதை நம்பி பேசிவிட்டு போனை கட் பண்ணி விடுகிறார். பிறகு விஜய் போன் பண்ணதாக இருக்கக் கூடாது என்பதற்காக காவேரி ஃபோனில் இருந்து விஜய் கால் பண்ணினதை டெலிட் பண்ணி விடுகிறார். இதனை தொடர்ந்து விஜய் மனதில் இப்பொழுதும் காவிரி தான் இருக்கிறார் என்று ராகினிக்கு தெரிந்து விட்டது.

ஆனால் இந்த விஷயம் நம்மை தவிர காவிரிக்கு தெரியக்கூடாது. இதை வைத்தே காவிரியை விஜய்யிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்று ராகினி பிளான் பண்ணி விட்டார். ராகினி இருக்கும் வரை இந்த மாதிரி சில்லறைத்தனமான விஷயங்களை பண்ணி காவேரி மற்றும் விஜய்க்கு நடுவில் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்று பிளான் பண்ணிக் கொண்டுதான் வருவார்.

வெண்ணிலா வந்த பிறகு லெட்டர் விஷயத்திலும் போன் விஷயத்திலும் விஜய் சொதப்பியதால் காவேரி மனதில் தேவையில்லாத பயம் வர ஆரம்பித்துவிட்டது. அதே மாதிரி காவிரி வாழ்க்கை என்னவாகப் போகுது என்று குமரன் வந்து நவீனிடம் புலம்புகிறார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த யமுனா, இந்த மாமா வேற நவீன் மனசு தெரியாமல் காவிரியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறாரே என்று புலம்பிக் கொள்கிறார்.

Trending News