தனுஷ் வரவர இயக்குவதில் அதிக நாட்டம் காட்டி வருகிறார். தானே இயக்கி நடித்தும் வருகிறார். பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், என மூன்று படங்களை இயக்கியுள்ளார்.
இப்பொழுது தனது இயக்கத்தில் நான்காவது படமாக “இட்லி கடை” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். படத்திற்கும் பெயருக்கும் சம்பந்தமே இல்லாமல் வெளிநாடுகளில் எல்லாம் சூட்டிங் செய்கின்றனர்.
இதற்கு இடையில் 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆக வேண்டிய படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயங்கி வந்தார். அப்பொழுதே தனுஷ் மற்றும் கௌதம் இடையே பல பிரச்சினைகள் இருந்தது.
இந்தப் படத்திற்கு பைனான்ஸ் இல்லாமல் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நிறைய தடை கற்களை போட்டார். இதனால் இந்த படம் ட்ராப் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இன்று வரை இதற்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கவில்லை.
இப்பொழுது கௌதம் வாசுதேவ் மேனன் தனுசை வைத்து இன்னொரு படத்தை தயாரிக்க விருப்பம் காட்டி வருகிறார்.அதனால் தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளார்.
அவரும் எதைச்சையாக தனுஷிடம் இதை சொல்ல அவருக்கு அப்பாயின்மென்ட் கொடுக்காதீர்கள். அவருடன் படம் பண்ண விருப்பமில்லை என ஒரே போடாக போட்டு விட்டாராம். இன்னும் பழசை மறக்காமல் கோபத்தில் இருக்கிறார் தனுஷ்..