செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

திருந்தாத ஈஸ்வரி செய்யும் அட்டூழியத்தால் தனியாக தவிக்கும் ராதிகா.. பாக்யாவிற்கு ரூட் விடும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி என்னுடன் வரமாட்டேன் என்று சொல்லி அம்மா கூப்பிட்டதும் பின்னாடியே பாக்யா வீட்டுக்கு போய்விட்டார் என்று ராதிகா, வீட்டிற்கு வந்து கமலாவிடம் புலம்புகிறார். உடனே ராதிகாவின் அம்மா இதை சும்மா விட்டு விட மாட்டேன் நான் போய் என்ன என்று கேட்டு வருகிறேன் என சொல்லி பாக்யாவின் வீட்டிற்கு வந்து விடுகிறார்.

வாசலில் நின்ற பாக்யாவிடம் என் மகளை சந்தோஷமாகவே இருக்க விட மாட்டீர்களா என்று சண்டை போட ஆரம்பித்து விட்டார். அதற்கு பாக்யா எது பேசுவதாக இருந்தாலும் கோபியின் அம்மாவிடம் போய் பேசிக்கோங்க என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டார். உடனே ஈஸ்வரிடம், கட்டின பொண்டாட்டியிடம் இருந்து உங்க பிள்ளையை கூட்டிட்டு வருவது சரியாக இருக்கிறதா? உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா என்று கேட்கிறார்.

அதற்கு ஈஸ்வரி மனசாட்சி பற்றி நீ பேசுறியா? என் பையன் எங்க வீட்ல என்னுடன் இருக்கும் பொழுது ராஜா மாதிரி சந்தோசமாக இருந்தான். எப்போது உங்க பொண்ண கட்டிக்கிட்டு உங்க கூட வந்தானோ, அப்பொழுதே அவனுடைய நிம்மதி எல்லாம் தொலைத்து உடம்பு சரியில்லை என்று ஹாஸ்பிடல் ரெண்டு தடவை சேர்க்கும்படி அவனுடைய நிலைமை மோசமாகிவிட்டது.

இனியும் உங்களை எல்லாம் நம்பி என்னுடைய பையனை விட முடியாது. என்னுடன் தான் என் பையன் இருப்பான் உன்னால் என்ன பண்ண முடியுமோ போய் பாரு என்று சொல்லிவிடுகிறார். அதற்கு ராதிகாவின் அம்மா போலீஸ் மூலம் போய் உங்களை என்ன பண்றேன்னு பாருங்கள் என மிரட்டுகிறார். ஆனால் ஈஸ்வரி, என் பையன் அவன் விருப்பத்துடன் தான் இங்கே வந்திருக்கிறான்.

உன்னால என்ன பண்ண முடியுமோ போய் பாரு, இப்போ என் வீட்டை விட்டு வெளியே போ, இல்லனா கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிடுவேன் என்று வாய்க்கு வந்தபடி திருந்தாத ஈஸ்வரி பேசியதால் ராதிகாவின் அம்மாவால் எதுவும் சொல்ல முடியாமல் போய்விட்டார். அடுத்ததாக கோபிக்கு தனியாக சமைத்துக் கொடுக்க பாக்கியாவிடம் ஈஸ்வரி வந்து கேட்கிறார்.

ஆனால் பாக்கியா முடியாது என்று மறுத்ததால் ஈஸ்வரி, கோபிக்காக சமைத்து கொடுக்கிறார். பிறகு எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிடும் பொழுது பாக்கியவிடம் பேச கோபிக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் பாக்யா கண்டு கொள்ளாமல் போய்விடுகிறார். கோபி வந்தது பாக்யாவிற்கு மட்டுமல்லாமல் ஜெனிக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை.

இருந்தாலும் ஈஸ்வரி, கோபி, செழியன் மற்றும் இனியா என அனைவரும் ஒன்றாக இருந்து காமெடியாக பேசி சிரித்து கொள்கிறார்கள். ஆனால் ராதிகா, மயூயுடன் தனியாக இருந்து கோபி போனதை நினைத்து வருத்தப்பட்டு பீல் பண்ணுகிறார். பிறகு ராதிகாவுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக அவருடைய அம்மா பேசி சமாதானம் படுத்துகிறார். இருந்தாலும் ராதிகாவின் நிலைமை பார்க்கும்பொழுது ரொம்பவே கவலையாக தான் இருக்கிறது.

பாக்கியா வேண்டாம் என்று ராதிகா பின்னாடி போன கோபி, தற்போது ராதிகாவை பற்றி கொஞ்சம் கூட நினைப்பில்லாமல் பாக்யாவை ரூட் விடும் விதமாக அலைவதை பார்ப்பதற்கே எரிச்சல் படுத்தும் விதமாக இருக்கிறது.

Trending News