புதன்கிழமை, ஜனவரி 22, 2025

600 கோடி வசூலை அசால்ட் செய்த 7 தென்னிந்திய  ஹீரோக்கள்.. Bollywood-அ எப்பவோ தாண்டியாச்சு!

பாலிவுட் சினிமாவுக்கு சவால் விட்டு தென்னிய சினிமாக்கள் ஜொலித்து வருகின்றன. குறிப்பாக அதிக பட்ஜெட், பான் இந்தியா படங்கள், நடிகர்கள் சம்பளம், பிசினஸ், புரமோசன், ஆஸ்கர் விருது, வசூலில் பாலிவுட்டை ஓவர்டேக் செய்து வருகிறது.

600 கோடி கிளப்பில் இணைந்த நடிகர்கள் & படங்கள்

அதன்படி, தென்னிந்திய சினிமாவில் 600 கோடி கிளப்பில் இணைந்த நடிகர்களின் பட்டியலை பார்க்கலாம்.

பிரபாஸ்-ன் பாகுபலி 1, 2, சலார், கல்கி ஆகிய படங்கள் 600 கோடிக்கு மேல் வசூல் குவித்து, 600 கோடி கிளப்பில் இணைந்தன.

ரஜினியின் 2.0 மற்றும் ஜெயிலர் ஆகிய படங்கள் 600 கோடிக்கு மேல் வசூல் குவித்து இந்த கிளப்பில் இணைந்தன.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் 600 கோடிக்கு மேல் வசூல் குவித்து இந்த கிளப்பில் இடம் பிடித்துள்ளது. இப்படம் 1200 கோடி வசூலித்து குறிப்பிடத்தக்கது.

யாஷின் கேஜிஎப் 2 படம் பான் இந்தியா ஹிட் அடித்து 600 கோடிக்கு மேல் வசூலித்து இந்த கிளப்பில் இணைந்தது.

அதேபோல், அல்லு அர்ஜூன் நடிப்பில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான புஷ்பா 2 படம் 600 கோடிக்கு மேல் வசூலித்து இந்த கிளப்பில் இணைந்துள்ளது.

பாலிவுட் படங்கள் ஹிட் கொடுக்கவே திணறி வருகின்றன இந்த சூழலில் தென்னிந்திய படங்கள் பான் இந்தியா ஹிட் அடித்து 600 கோடி கிளப்பில் இணைவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பிரபாஸ், ரஜினிகாந்த், யாஷ், அல்லு அர்ஜீன், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் படங்கள் இந்த வசூல் சாதனையை படைத்துள்ளது. அவர்களுக்கு பராட்டுகள் குவிந்து வருகிறது.



Trending News