வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு திரைப்பயண நிறைவு.. டபுள் சந்தோஷத்துடன் கொண்டாட வரும் வணங்கான் டீம்

Director Bala: இயக்குனர் பாலா இயக்கிய படம் என்றாலே வெற்றிகளையும் விருதுகளையும் குவித்து விடும். அதற்கு ஏற்ற மாதிரி அவருடைய படத்தில் கமிட்டான ஆர்டிஸ்ட்களை பாலா எதிர்பார்க்கும் அளவிற்கு நடிப்பை வாங்கி விடுவார். அதனாலேயே முன்னணி ஹீரோக்கள் பலரும் பாலா படம் என்றாலே தெருச்சு ஓடும் அளவிற்கு எஸ்கேப் ஆகி விடுவார்கள்.

ஆனாலும் இன்னொரு பக்கம் இவர் படத்தில் கமிட் ஆகி நடித்து விட்டால் அவர்களுக்கு நிச்சயம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை. ஏனென்றால் அந்த அளவிற்கு பாலாவின் படங்கள் உண்மை கதையாகவும் எதார்த்தமான நடிப்புடன் மக்களை கவர்ந்து விடும். 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தின் மூலம் இயக்குனராக பாலா அறிமுகம் ஆனார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற தரமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். ஆனால் தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா போன்ற படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெயர் வாங்காமல் போய்விட்டது.

இதனால் இவருக்கு என்று சம்பாதித்த பேரும் புகழையும் மறுபடியும் மீட்டெடுக்கும் விதமாக அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை வெறித்தனமாக இயக்கியிருக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை அன்று அனைத்து திரையரங்கிலும் ரிலீஸ் ஆகப்போகிறது. ஆனால் அதற்கு முன் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற 18-ஆம் தேதி நடைபெறப் போகிறது.

அதே நாளில் பாலா இயக்குனராக திரைப்பயணத்தில் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆனதால் அதை கொண்டாடும் விதமாக விழாவை சிறப்பிக்க போகிறார்கள். அந்த வகையில் வணங்கான் இசை வெளியீட்டு விழாவையும் இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு திரை உலக பயணத்தையும் கொண்டாடும் விதமாக வருகிற 18-ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் மாலை 5மணிக்கு இரட்டை விழாவாக கொண்டாடப் போகிறார்கள்.

இதில் வணங்கான் டீமுடன் சேர்ந்து அருண் விஜய் மற்றும் இயக்குனர் பாலாவை கௌரவிக்க பல பிரபலங்களும் கலந்து கொள்ளப் போகிறார்கள். ஆனால் சூர்யா இந்த பங்க்ஷனில் கலந்து கொள்வாரா என்பது தான் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் வணங்கான் படத்தில் முட்டி மோதிக் கொண்டு பஞ்சாயத்து ஏற்பட்டது.

இதனால் வணங்கான் படத்துடன் பாலாவுக்கும் பெரிய கும்பிடு போட்டு சூர்யா விலகிவிட்டார். ஆனாலும் சூர்யாவின் கேரியரில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த நந்தா மற்றும் பிதாமகன் படத்தை இயக்கிய குரு என்கிற முறைக்கு கௌரவம் தெரிவிக்க வருவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Trending News