தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
கன்னட சினிமாவில் தசாவாலா படம் மூலம் அறிமுகமானார். அதில், ஜோகி புகழ் பிரேமுக்கும் ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படத்தில் மன நலம் குன்றிய பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டைப் பெற்றார். அவருக்குள் இத்தனை நடிப்புத் திறமையா என எல்லோரும் வியந்து பார்த்தனர்.
இவர், காதலில் சொதப்புவது எப்படி, ஆப்பிள் பெண்ணே, நமோ பிதாத்மா, வீர, தமிழ்ப்பாம் 2, நான் சிரித்தால், வேழம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
சினிமாவில் மட்டுமின்றி, சின்னத்திரையில், தென்றல், தமிழ் ராக்கர்ஸ் ஆகிய தொடர்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிப்பார் என கூறப்படுகிறது.