தலைவரின் 74 ஆவது பிறந்தநாள் வர போகிறது. வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ரசிகர்கள் ஆரவாரத்துடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடலாம் என்று இருக்கும் இந்த நேரத்தில், அவரது பிறந்தநாளில் வீட்டை விட்டு வெளியவே வர முடியாது போல..
சூப்பர்ஸ்டார்-ன் இந்த பிறந்தநாள் மிகவும் ஸ்பெஷல். காரணம் இந்த வருத்தத்தோடு, அவர் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதற்கான கொண்டாட்டங்கள், நிகழ்ச்சி ஏற்பாடுகள் எல்லாம் ஒருபக்கம் ஜோராக நடந்துவருகிறது.
இந்த 74-ஆவது வயதிலும், நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார். இன்னும் 4 வருடத்துக்கு கையில் பிடிக்க முடியாத அளவுக்கு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.
வீட்டை விட்டு வெளியவே இறங்க முடியாது
அவரது வயதுக்கும், அவர் உடலில் இருக்கும் உபாதைக்கு, இந்த அளவுக்கு முனைப்போடு அவர் பணியாற்றுவது உண்மையில் பெரிய விஷயம். இதற்காகவே அவருக்கு ஒரு salute அடிக்கவேண்டும்.
இந்த நிலையில், இந்த ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்காக கட்டப்பட்ட கோவிலில், அவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்போகிறோம் என்று அன்பு தலைக்கேறி அது பித்தமாக மாறி, இப்படி ஒரு கூட்டம் அலைகிறது.
சூழ்நிலை இப்படி இருக்க, போற போக்கை பார்த்தால் அவர் பிறந்தநாளுக்கு வீட்டை விட்டு வெளியே கூட வரமுடியாது போல. காரணம் என்னவென்றால், அன்று தான் வானிலை ஆய்வு மய்யம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் மாதம் ஆனாலே சென்னை-க்கு mood swings வந்துவிடும். நினைத்த நேரத்தில், வெய்யில் அடிக்கும், திடீரென ஒரு நாள் மழையடிக்கும்.. புயல் வரும்.. இதனால் வெள்ளம் கூட வரும்..
இப்படி இருக்க கடந்த வருடம் சென்னை படாத பாடு பட்டது. அதே போல இந்த வருடமும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருந்தாலும் கூட, வர 12-ஆம் தேதி ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டது வயிற்றில் புளியை கரைத்துள்ளது.