வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அடேங்கப்பா இத்தனை படமா.. இனி 2 வருஷத்துக்கு சூர்யாவை கையிலையே பிடிக்க முடியாது

நடிகர் சூர்யாவுக்கு முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்த்த கங்குவா படம் அவருக்கு மோசமான விமர்சனங்களை பெற்று கொடுத்தது. இதனால் உடைந்து போன சூர்யா ஜோதிகா தற்போது ஆன்மீகத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து, அவரை கர்ணா படத்திலிருந்து நீக்கியதாக கூட தகவல் வெளியானது..

ஆனால் அதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை.. அவர் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிசியாக இருக்கிறார். அப்படி அவர் லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. எல்லாமே தரமான இயக்குனர்களாக இருக்கிறார்கள். இனி இவருக்கு ஏறுமுகம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2 வருஷத்துக்கு சூர்யாவை தொடக்கூட முடியாது..

அப்படி தற்போது சூர்யா 44 படத்தை முடித்துவிட்டு சூர்யா 45 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஆர்.ஜெ. பாலாஜி இயக்க, திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் சாய் அப்யங்கர் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார்.

அதை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் தற்போது ஹிந்தியில் கர்ணா படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். இது பாலிவுட்டில் அவருக்கு மிகப்பெரிய opening ஆக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும் கைதி 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் Rolex எனும் ஒரு படத்திலும் நடிப்பார். இதை தொடர்ந்து, கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தில் விடுபட்ட காட்சிகளிலும் நடிக்கிறார். அந்த படத்தை மட்டும் சரியாக இயக்கினால், நிச்சயம் blockbuster ஹிட் தான்.

இதை தொடர்ந்து சூர்யா 50 படம் உள்ளது. அதை யார் இயக்கப்போகிறார்கள் என்பது இதுவரை முடிவாகவில்லை. இதை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலே, இரும்புகைமாயாவி படத்திலும் நடிப்பார். இன்னும் 2 வருஷத்துக்கு சூர்யாவை தொடக்கூட முடியாது என்பது உறுதியாக தெரிகிறது.

Trending News