வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அடித்தது ஜாக்பாட்.. AR ரஹ்மானுக்கு பதிலா இவுறா.. சூர்யா 45-ல் இணைந்த LCU

கங்குவா படத்தின் தோல்வியை தொடர்ந்து, சூர்யா தனது அடுத்த படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் சூர்யா 44-க்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் ஆர்.ஜெ. பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சூர்யா 45-ல் நடிகை திரிஷா இணைந்துள்ளார். 18 வருடங்கள் கழித்து இவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முதலில் இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில், நிச்சயம் இது ஒரு தரமான படைப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்ற எண்ணம் தான் இருந்தது.

ரஹ்மானுக்கு பதிலா இவுறா

இந்த நிலையில், AR ரஹ்மான் தற்போது சூர்யா 45 படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியானது. இந்த படம் மட்டும் அல்ல, பல படங்களில் இருந்து ரஹ்மான் விலகியதாக கூறப்படுகிறது.

இதற்க்கு காரணம் சமீபத்தில் நடந்த டிவோர்ஸ் பஞ்சாயத்து தான். அதிலிருந்தே, அவர் மனதளவில் கொஞ்சம் உடைந்து போயுள்ளார். அதனால் தான் படங்களில் இருந்து விலகுகிறார் என்று செய்திகள் பரவியது.

ஆனால் அது ஒரு காரணமாக இருந்தாலும் கூட, அவர் ஏற்கனவே, நிறைய படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதனால், அவருக்கு புதிய படங்களுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தனது குடும்பத்துடன், அதாவது தனது மனைவியுடன் கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.

இந்த நிலையில், சூர்யா 45 படத்தில் AR ரஹ்மானுக்கு பதிலாக சாய் அப்யங்கர் தான் இணைந்துள்ளார். இவருக்கு அடித்த ஜாக்பாட் என்றே சொல்லலாம். ஏற்கனவே லோகி தயாரிப்பில், பென்ஸ் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில், இவ்வளவு பெரிய படத்தில், அதுவும் AR ரஹ்மானுக்கு பதிலாக இவர் இணைந்திருப்பது, மிக பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

Trending News