வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அடடே, பிரேம் மேனன் இயக்கிய படங்களா இவை.. 90ஸ் கிட்ஸ் ஃபேவரெட் நடிகர்

இந்திய சினிமாவில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என வேலை செய்தவர் பிரேம் மேனன். இவர், ஏ.ஜெகந்நாதன் இயக்கிய குரோதம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 1982-ல் வெளியான இப்படத்தில் பிரேம் மேனன் கதை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

அடுத்து, என் ஆசை உன்னோடுதான், வீரமணி, வெற்றிக்கரங்கள், அந்த நாள், அசோகா ஆகிய படங்களில் நடித்தார். அவரை 90ஸ் கிட்ஸின் பேவரெட் நடிகரான பிரேம் மேனன் இயக்கிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அதைப் பற்றி இதில் பார்க்கலாம்.

புதுப்பிறவி

பிரேம் மேனன் இயக்கி நடித்த படங்களுள் ஒன்று புது பிறவி. இப்படத்தில் அவருடன் இணைந்து விஜயகுமார், ரோஹிணி நடித்திருந்தனர். 1993 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அவரை சிறந்த இயக்குனராகவும் ரசிகர்களின் மத்தியில் அடையாளப்படுத்தியது.

வீரமணி

பிரேம் மேனன் இயக்கி நடித்த வீரமணி படம் 1994 ஆம் ஆடு வெளியாகிஉ வெற்றி பெற்றது. இப்படத்தில் அவருடன் இணைந்து யுவராணி, விணு சக்ரவர்த்தி, பப்லு பிரித்விராஜ், ஜெய் கணேஷ், வி.கே. ராமசானி நடித்திருந்தனர். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

குரோதம் 2

பிரேம் நடித்து இயக்கிய குரோதம் 2 படம் 2000 -ல் வெளியானது. இப்படத்தில் ராதிகா செளத்ரி, நாசர், ஆனந்தராஜ், அலெக்ஸ், மன்சூர் அலிகான், ராஜிவ், ரவிச்சந்திரன், குஷ்பூ, மானசா நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அசோகா

பிரேம் மேனன் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய படம் அசோகா. இதில், ரகுவரன், ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், பூஜா பாரதி, அனுஸ்ரீ நடித்தனர். சபேஷ் முரளி இசையமைத்தார். இப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியானது. இந்திய பிரதமரைக் காப்பாற்றும் மெய்க்காப்பாளரைப் பற்றிய படமாக இது உருவானது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவில் தனக்கென தனி அடையாளத்துடன் குறிப்பிட்ட சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர், இயக்குனராக பிரேம் மேனன் இருக்கிறார். அவர் அடுத்த படம் எப்போது இயக்குவார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Trending News