Vijay: தற்போது அரசியல் வட்டாரத்தில் விஜய் அலை வீசி கொண்டிருக்கிறது. அவர் எது செய்தாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அப்படித்தான் சமீபத்தில் அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜுனா ஆளும் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.
இது எதிர்ப்புகளை சந்தித்த நிலையில் திருமாவளவன் அவரை ஆறு மாதத்திற்கு கட்சியை விட்டு இடைநீக்கம் செய்தார். உடனே ஆதவ் தொண்டர்களின் குரலாக இருப்பேன் என பதிலளித்திருந்தார்.
இது எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும் விசிக தொண்டர்கள் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இந்த விவகாரத்தில் ப்ளூ சட்டை மாறன் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு
அதாவது ஆதவ் தன்னை சஸ்பெண்ட் செய்ததால் கோபப்பட்டு விரைவில் ராஜினாமா செய்துவிடுவார். அதன் பிறகு விஜய் கட்சியில் ஸ்லீப்பர் செல்லாக சேர்வார்.
அங்கு சோலியை முடித்த பிறகு மீண்டும் பழைய இடத்திற்கு வந்துவிடுவார். விஜய் அவர்களே உஷாரய்யா உஷாரு என பதிவிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்து இவர் விஜயின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்.. அதில் தற்போதைய பிரச்சனையையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.
இதற்கு வழக்கம் போல விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து இந்த பிரச்சனையில் கருத்து தெரிவித்து வருகிறார்.