Actor Raghuvaran: தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வில்லன் இனியும் வர வாய்ப்பு கிடையாது அப்படி ஒரு லெஜெண்ட் நடிகர் தான் ரகுவரன்.
ஹீரோ வில்லன் குணச்சித்திரம் என இவர் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. ஆனால் எந்த கேரக்டராக இருந்தாலும் அதற்கு உயிர் கொடுக்கும் வல்லமை இவருக்கு உண்டு.
அதனாலேயே அவர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆனாலும் நாம் அவரை மிஸ் செய்கிறோம். அதேபோல் தமிழ் சினிமாவும் அவருடைய இழப்பை ஈடு செய்ய முடியாமல் திணறுகிறது.
ரோகிணி போட்ட பதிவு
தற்போது அவருடைய மனைவி ரோகிணி எமோஷனலாக ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் ரகுவின் பிறந்தநாள் டிசம்பர் 10 என அவரின் அம்மா சொல்வார்.
ஆனால் ரகு இல்லை 11ம் தேதி தான் என சொல்வார். காரணம் அந்த தேதியில் தான் பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் பிறந்திருக்கிறார்.
அதனால் கூட ரகு அந்த தேதியை விரும்பி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இந்த இருவருமே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் மிஸ் யூ ரகு என பதிவிட்டுள்ளார்.
அவருடைய இந்த பதிவு ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அதேபோல் ரகுவரனின் பெருமைகளையும் ரசிகர்கள் பகிர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.