சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அனிருத்தை காலி பண்ண வரும் இசையமைப்பாளர்.. தொடர்ந்து புக் ஆகும் படங்கள்

3 படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் எப்படி பெரிய படமாக கத்தி படத்தில் கமிட் ஆனாரோ.. தற்போது அதே மாதிரி வளர்ந்து வருகிறார் சாய் அப்யங்கர். அவரது காட்டில் இனி அடைமழை தான் என்பது போல அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதுவும் Ar ரஹ்மானுக்கு பதிலாக ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல..

யார் இந்த சாய் அப்யங்கர்?

திப்பு மற்றும் ஹரிணி பாடகர்களின் மகன் தான் சாய் அப்யங்கர். 2000 காலகட்டத்தில் இவர்கள் பாட்டை கேட்டு வளராத 90ஸ் கிட்ஸ் இல்லை என்று கூட கூறலாம். கட்சி சேர, ஆச கூட என்ற இந்த 2 பாடலும் வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகி, சிறுவர்கள் பெரியவர்கள் என்று அனைவரையும் Vibe ஆக வைத்தது. அந்த 2 பாடலை கேட்டா, இத்தனை producer-கள் இவரை தேடி வருகிறார்கள் என்று கேட்டால், அது தான் இல்லை..

நாம் அனைவருக்கும் பரிச்சயமான பாடல் இந்த 2 மட்டும் தான். ஆனால், அவர் ஒவ்வொரு Genre-க்கும் தனி தனியாக ஆல்பம் உருவாக்கி தனக்கான portfolio-வை உருவாக்கி வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, இவருக்கு இசை மீது இருக்கும் காதலை புரிந்து கொண்ட இவரது பெற்றோர்கள், சாய் அப்யங்கரின் 13-ஆவது வயதில் Ar ரஹ்மானிடம் ஒப்படைத்து விட்டார்கள்.

அவருடன் சேர்ந்து கோப்ரா படத்தின், இசை நிகழ்ச்சியில் பணியாற்றியுள்ளார். தற்போது சூர்யா 45 படத்திலிருந்து ரஹ்மான் விலகும்போது கூட, சாய் அப்யங்கரை கை காட்டி விட்டு தான் விலகி இருக்கிறார். அதனால் தான் அவரை ஆர்.ஜெ பாலாஜி அணுகியுள்ளார்.

மேலும் அனிருத் பல படங்களில் பிசியாக இருப்பதால், அவருக்கு ஒரு alternative-ஆக தற்போது சாய் அப்யங்கர் வந்துள்ளார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால், நிச்சயம் அனிருத் போல பெரிய இசையமைப்பாளராக மாறுவார்.

அடேங்கப்பா.. அடிச்சது பாரு Luck..

தற்போது சாய் அப்யங்கர் பென்ஸ் படத்தில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் LCU-வில் தான் வரும். இதை தொடர்ந்து, சமீபத்தில் சூர்யா 45 படத்தில் கமிட் ஆனார். அது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்பட்டது..

ஏராளமானோர்.. ‘அடேங்கப்பா.. அடிச்சது பாரு luck..’ என்று சொல்லும் அதே நேரத்தில், மீண்டும் ஒரு பெரிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்திஸ்வரன், அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக மமிதா பைஜூ நடிக்கவிருக்கிறார். இந்த படத்திலும் சாய் அப்யங்கரை இசையமைக்க கமிட் செய்துள்ளது படக்குழு. இது சாய் அப்யங்கர் ரசிகர்களுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News