வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

வாழ்க்கை ஒரு வட்டம்.. பாமக பகையை மறந்த ரஜினி, பெரிய மனுஷன்னு நிரூபித்த சம்பவம்

Rajini: ரஜினி செய்த ஒரு விஷயம் தான் இப்போது ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது இவருக்கும் பாமக கட்சிக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கிறது.

கருத்து வேறுபாடு என்று சொல்வதை விட பகை என்று சொன்னால் சரியாக இருக்கும். ஏனென்றால் பாபா படம் வெளிவந்த போது பாமக அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது..

அதில் ரஜினி புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்று இருந்தது. அதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.

அது மட்டும் இன்றி கட்சியினரும் பாபா படம் ஓடிய தியேட்டரில் பெரும் பிரச்சனை செய்தனர். இது அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தையே பரபரப்பாகியது.

பாமக பகையை மறந்த ரஜினி

இதனால் ரஜினியும் கோபமுற்றார். அதன் விளைவு அடுத்ததாக வந்த தேர்தலில் பாமகவுக்கு எதிராக அவர் இறங்கினார்.

அவருடைய ரசிகர்களும் அதற்கான வேலைகளை பார்த்தனர். இப்படி ஒரு பெரும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. இந்த சூழலில் அந்த பகை முடிந்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சூப்பர் ஸ்டாரை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். அவர் தற்போது அலங்கு என்ற படம் மூலம் தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் ட்ரைலரை ரஜினி வெளியிட்டுள்ளார். மேலும் அந்த காட்சிகளை பார்த்த தலைவர் படகுழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

இதுதான் இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என இதைத்தான் சொல்வார்கள். தன்னை எதிர்த்தவர்களை கூட ரஜினி மன்னித்துள்ளார்.

இதிலிருந்தே தான் ஒரு பெரிய மனுஷன்னு அவர் நிரூபித்து விட்டார் என ரசிகர்கள் பெருமைப்பட்டு வருகின்றனர். ஆக மொத்தம் பல வருட பகை இதன்மூலம் முடிவுக்கு வந்துவிட்டது.

- Advertisement -

Trending News