Memes: மீண்டும் குடை ரெயின் கோட்டை எடுக்கும் நேரம் வந்துவிட்டது. நேற்றிலிருந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது.
அதில் இன்று கனமழை செய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம்போல் ஆபீஸ் செல்பவர்கள் கிளம்பிதான் ஆக வேண்டும்.
இந்த டிசம்பர் எப்ப தான் முடியுமோ என அவர்கள் அலுத்துக் கொண்டே செல்கின்றனர். அதேபோல் சென்னைவாசிகள் மறுபடியும் பாலத்தில் காரை விடலாமா என யோசிக்கின்றனர்.
ஆனால் அதற்கும் பயமாகத்தான் இருக்கிறது. திருவண்ணாமலையில் சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் தண்ணீரோடு அடித்து சென்று விட்டது.
அதனால் சென்னைவாசிகளே உஷார் என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதேபோல் பெஞ்சல் புயல் வந்தபோது விஜய் மக்களை பனையூர் அலுவலகத்திற்கு வரவைத்து நிவாரண பொருட்களை கொடுத்தார்.
அதனால் மீண்டும் இப்போது மழை பெய்வதால் பனையூருக்கு சென்று குடை வாங்கி கொள்ளுங்கள் என்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது. இப்படி இன்று இணையத்தை கலக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.