வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பட்டு வேட்டி, சட்டையில் விஜய்.. கீர்த்தி சுரேஷ் திருமண கொண்டாட்டத்திற்கு தயாரான தளபதி

Vijay : கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வந்த கீர்த்தி சுரேஷ் இன்று தனது காதலனை கரம் பிடிக்க இருக்கிறார். தனது பள்ளி பருவம் தொடங்கி 15 வருடமாக காதலித்த ஆண்டனியை கீர்த்தி சுரேஷ் மணக்கிறார்.

கோவாவில் இந்த திருமணம் நடைபெறும் நிலையில் இதில் நெருங்கிய உறவினர்கள், மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இவர்களது திருமணம் ஹிந்தி முறைப்படி நடக்க இருக்கிறது.

இந்த சூழலில் கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு பட்டு வேஷ்டி, சட்டையில் விஜய் கலந்து கொண்ட உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதாவது கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் இருவரும் பைரவா மற்றும் சர்கார் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய்யின் புகைப்படம்

vijay
vijay

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது. இதற்கு காரணம் கீர்த்தி சுரேஷ் தான் என்றும் கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால் திடீரென கீர்த்தி சுரேஷின் திருமணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதுவும் 15 வருடமாக ஒருவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வந்ததாக வெளியான செய்தி இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் தனது திருமணத்திற்கு தளபதி விஜய்யை கீர்த்தி சுரேஷ் அழைத்துள்ளார்.

ஒரு குடும்ப உறவினராகவும், நண்பராகவும் விஜய் கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் பட்டு வேஷ்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் மிக விரைவில் கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படமும் வெளியாக இருக்கிறது. இப்போது இவருக்கு ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

Trending News