விஜய் சேதுபதி கேரியரில் தி பெஸ்ட் படமாக உள்ளது மகாராஜா திரைப்படம். இந்த படத்திற்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, சீனாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் வசூல் வேட்டை நடத்துகிறது. இப்படி பட்ட சூழ்நிலையில், ஜவான் படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் சேதுபதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் தான் இனி எந்த படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தை செய்யமாட்டேன் என்று கூறியிருந்தார். ஏன் என்றால், தொடர்ந்து அனைவரும் வில்லன் ரோல் மட்டும் நடிக்க சொல்லி அணுகுவதாக வருத்தம் தெரிவித்தார். இதனால் அவருக்கு அப்போது கொஞ்சம் பட வாய்ப்புகள் குறைந்தாலும், தொடர்ந்து கிடைக்கும் நல்ல படங்களில் நடித்து வந்தார்.
அப்படி அவர் கையில் வந்து விழுந்த தங்க தட்டு தான் மகாராஜா திரைப்படம். அந்த படம் அவருக்கு பெரிய அந்தஸ்தை வாங்கி கொடுத்தது. மேலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குவதால், மக்களுடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டார்.
சூர்யா-க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?
இப்படி இருக்க, தற்போது ட்ரெயின் போன்ற படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, ஒரு முக்கிய முடிவையும் எடுத்திருந்தார். தான் இனி நட்புக்காக படம் பண்ணாமல், உண்மையில் நல்ல கதையாக இருந்தால் மட்டும் நடிப்பதாக கூறியிருந்தார். இதுவே அவரை உயர்த்திவிட்ட பல இயக்குனர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது சூர்யா 45 படத்தில் நடிக்க நடிகர்களை தேர்வு செய்து வருகிறார் ஆர்.ஜெ. பாலாஜி. அப்படி விஜய் சேதுபதி அவர் அணுகியதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் உண்மையில் சூர்யா 45 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாரே தவிர வில்லனாக நடிக்க வாய்ப்பில்லை என்றுதான் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
தற்போது விடுதலை 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, தொடர்ந்து அதேபோல நடிப்பாரா இல்லை முதன்மை கதாபாத்திரமான ஹீரோ ரோல் மட்டும் தான் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.