லக்கி பாஸ்கர் படம் துல்கரின் முதல் 100 கோடி வசூலை கொடுத்த படமாக உள்ளது. சீதா ராமம் படத்துக்கு பிறகு உடல்நல குறைவால், ஒரு வருட பிரேக் எடுத்துக்கொண்டு இந்த படத்தில் நடித்துள்ளார். தீபாவளி பந்தயத்தில் இந்த படமும் அமரன் படத்துக்கும் தான் போட்டி இருந்தது.
படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்ததோடு OTT-யில் வெளியான பிறகு ட்ரெண்டிங்கிலும் இருந்தது. படத்தின் கதை மிடில் கிளாஸ் மக்களுக்கு கனெக்ட் ஆகும் வகையில் இருந்தது. மேலும் ராம்கி-க்கு இந்த படம் ஒரு comeback ஆகவும் அமைந்தது..
சிறுவண்டுகள் செய்த வேலை..
ஆந்திர மாநிலத்தில் உள்ள 9 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள் லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துள்ளார்கள். இந்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு, தானும் அதேபோல பணம் சம்பாதிக்கப்போவதாக கூறிவிட்டு, பள்ளி விடுதியிலிருந்து வெளியேறியுள்ளார்கள். இது அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஹயிலைட் என்னவென்றால், “இந்த மாணவர்கள் சகமானவர்களிடம்.. நாங்களும் திடீர் பணக்காரர்களாக போகிறோம்” என்று கூறிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் போலீஸ் அதிகாரிகளிடம் புகாரளிக்க தற்போது இந்த மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையெல்லாம் பார்க்கும்போது யார்ரா.. நீங்கல்லாம்.. லாஜிக்-ஏ இல்லாம எதையோ பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. என்றுதான் தோன்றுகிறது.
ஆனால் மாணவர்கள் உண்மையில், வேறு எதோ திட்டத்தோடு வெளியேறி இருப்பது போல தான் தெரிகிறது. சும்மா சொல்லுவோம்.. என்று லக்கி பாஸ்கர் கதையை உருட்டியுள்ளார்கள்.