வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

யார் பக்கம் தான் நியாயம் உள்ளது.. குட்டையை குழப்பும் நயன்தாரா..

தனுஷ் நயன்தாரா விவகாரம் ஆரம்பித்ததிலிருந்து அவர்களது ரசிகர்களுக்கு தான் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. தனுஷ் நயன்தாரா இருவருக்கும் ரசிகர்களாக இருப்பவர்கள், யாருக்கு சப்போர்ட் செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி போய் இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் நன்பர்காளாக இருந்த இவர்கள் ‘நானும் ரவுடி தான்’ படத்துக்கு பிறகு, எதிரெதிர் துருவங்களாக மாறிவிட்டனர். இந்த படத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் தான் தனுஷை கோபப்படுத்தியுள்ளது. அவர்கள் காதல் விவகாரம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அவர்கள் பாடும் டூயட்-க்கு நான் ஏன் 10 கோடி மொய் எழுதவேண்டும் என்பதுதான் அவரது கேள்வி.

இது ஒரு நியாயமான கேள்வியாக இருக்கிறது. இதற்க்கு நயன்தாரா சமீபத்தில் கொடுத்த பதில் தான்.. “உண்மையில் யார் பக்கம் தான் நியாயம் உள்ளது.. மாறி மாறி குட்டையை குழப்புகிறார்களே” என்று சொல்ல வைத்திருக்கிறது.

சமீபத்தில் நயன்தாரா அளித்த பேட்டியில் தனுஷ் விவகாரம் பற்றி அவர் பேசியது வைரலாகி வருகிறது. அதில், “எல்லோரும் நான் என் படத்தை promote செய்யதான் தேவை இல்லாமல் அறிக்கை வெளியிட்டேன் என்று கூறி வருகிறார்கள். நான் publicity-காக அடுத்தவர்கள் இமேஜ்-ஐ கெடுக்கிறேன் என்றெல்லாம் சொல்கிறார்கள்..”

“ஆனால் எனக்கு அதனால் என்ன பயன்? விக்னேஷ் சிவன் படத்தில் எழுதிய நான்கு வரிகள் எங்கள் திருமண வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷல். அந்த வரிகளை பயன்படுத்த அனுமதி கேட்டேன். பலமுறை அவரது மேனேஜர் மூலமாகவும், அவரது நண்பர்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன்..”

“அவர் எதுக்குமே ரெஸ்பாண்ட் செய்யவில்லை. என்னுடைய இந்த ஆவணப்படத்துக்கு முதல் ஆளாக அவர்தான் அனுமதி அளிப்பார் என்று எண்ணினேன்.. ஆனால் அவர்தான் தற்போது வரை பிரச்சனை செய்கிறார்.

நாங்கள் நல்ல நண்பர்காளாக இருந்தோம். ஆனால் அது எல்லாம் இந்த 10 வருடத்தில் இல்லாமல் ஆகிவிட்டது..” என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையில் யாருக்கு சப்போர்ட் செய்வது என்றே தெரியவில்லை..

- Advertisement -

Trending News