வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்திற்கு வந்த சீரியல்கள்.. விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் திணறும் சிங்க பெண்ணே

Serial Trp: ஒவ்வொரு வாரமும் எந்த சீரியல்கள் அதிக புள்ளிகள் பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்களைப் பற்றி பார்க்கலாம்.

ராமாயணம்: புராணக் கதைகளுக்கு எப்பொழுதுமே மவுஸ் அதிகம் உண்டு என சொல்வதற்கு ஏற்ப எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே செய்யாது என்று சொல்லும் வகையில் ராமாயணம் சீரியல் மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் 8.55 பிள்ளைகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

அன்னம்: சுந்தரி சீரியல் போல பார்ப்பதற்கு அன்னம் சீரியல் அப்படியே அச்சு அசலாக இருக்கிறது. இருந்தாலும் அன்னத்தின் ஆசைகள் நிறைவேறுமா? அப்பாவின் கௌரவத்தை காப்பாற்றுவதற்கு சரவணன், அன்னம் கழுத்தில் தாலி கட்டி காதலை விட்டுக் கொடுப்பாரா என்பது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 8.69 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

சிங்க பெண்ணே: அன்பு ஆனந்தி காதலிக்க ஆரம்பித்து இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டாலும் இவர்களுடைய காதலை மகேஷிடம் சொல்லாமல் கண்ணாமூச்சி விளையாடுவது மகேஷுக்கு செய்யும் துரோகம் மாதிரி தெரிகிறது. இதனால் தற்போது என்னதான் கதை நன்றாக இருந்தாலும் மகேஷ் மனசை காயப்படுத்தும் அளவிற்கு இருப்பதால் என்னமோ விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் டிஆர்பி ரேட்டிங்கில் 9.16 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் தான் இருக்கிறது.

மூன்று முடிச்சு: கிராமத்தில் சுதந்திரமாகவும் தன்னம்பிக்கையாகவும் துள்ளித் திரிந்த நந்தினியை சூர்யா கல்யாணம் பண்ணி சுந்தரவல்லி இடம் மாட்டிவிட்டார் என்பது போல் மருமகளாக ஒவ்வொரு நாளும் நந்தினி அந்த வீட்டில் அவஸ்தை பட்டு வருகிறார். ஆனால் இது எதையும் புரிந்து கொள்ளாமல் சூர்யா அவருடைய சந்தோசத்தையும் அம்மாவை பழிவாங்க எடுக்கும் முயற்சியால் நந்தினி பலியாடாக சிக்கித் தவிக்கிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.26 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கயல்: எழிலின் அம்மாவை பற்றி எந்த விஷயத்தையும் கயல் சொல்லாமல் மறைத்தது தற்போது எழிலுக்கு தெரிந்து விட்டது. அந்த வகையில் அம்மா இந்த அளவுக்கு சதிகள் பண்ணி இருக்கிறார்களா என புரிந்து கொண்ட எழில் நீங்களும் வேண்டாம் உங்கள் சொத்து வேண்டாம் என்று சொல்லி கயலை கூட்டிட்டு வீட்டை விட்டு போய்விட்டார்.

எழில் இந்த அளவிற்கு கயல் மீது வைத்திருக்கும் பாசத்தை புரிந்து கொண்ட கயல், எழிலின் சந்தோஷத்தை பற்றி புரிந்து கொள்ளாமல் குடும்பத்தை பற்றி மட்டுமே யோசித்து வருகிறார். ஆனாலும் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.60 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது

- Advertisement -

Trending News