Rajinikanth: இன்றைய தலைமுறைகளுக்கு ரஜினி என்றால் சட்டை நினைவுக்கு வருவது காலா, ஜெயிலர் போன்ற படங்கள்தான்.
ரஜினி மாஸாக ஸ்டைல் காட்டி, ஹீரோயின்களுடன் டூயட் பாடி, காமெடியில் கலக்கிய 90ஸ் படங்களை அவ்வளவாக பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.
அந்த ரஜினி வர்ஷனை பார்ப்பதற்கு இந்த 5 படங்களை மிஸ் பண்ணாமல் பார்த்து விடுங்கள்.
ரஜினியின் 5, 90ஸ் படங்கள்
முத்து: குறும்புத்தனமும், வெகுளியான குணத்திலும் ரஜினி பின்னி பெடல் எடுத்த கேரக்டர் தான் முத்து.
தீபாவளி பரிசு காத்திருக்கிறது, இறுக்கி அணைச்சு ஒரு உம்மா போன்ற வசனங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தீப்பொறியை பற்ற வைத்ததே இந்த படத்தின் வசனங்கள் தான்.
பாட்ஷா: ரஜினி இல்லாமல் வேறொரு நடிகரை இந்த படத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது.
அதே நேரத்தில் தேவாவின் இசை படத்திற்கு பெரிய பாசிட்டிவ். ரஜினியே நினைத்தாலும் இனி இந்த படத்தில் நடித்தது போல் நடிக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
படையப்பா: காமெடி, காதல், பஞ்ச் டயலாக், மாஸ் காட்சிகள் என எல்லா பாசிட்டிவ் விஷயங்களும் முழுக்க நிறைந்திருக்கும் படம் தான் படையப்பா.
இன்று வரை டிவியில் இந்த படம் ஒளிபரப்பானால் டிஆர்பி பிச்சுகிட்டு போகும்.
வீரா: இரண்டு மனைவிகளை கட்டிக்கொண்டு ஹீரோக்கள் சமாளிப்பது போல் அந்த காலத்தில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன.
அதில் ரொம்பவும் தனித்துவமாக இருந்தது ரஜினியின் வீரா. இந்த படத்தில் ரஜினி காமெடியில் அசத்தி இருப்பார்.
அருணாச்சலம்: 30 கோடியை, 30 நாட்களில் செலவு பண்ணினால் 300 கோடி சொத்து. இதை ரஜினி எப்படி செலவு செய்து வெற்றி பெறப் போகிறார்.
அத்துடன் சேர்த்து கவுண்டமணி இல்லாமல் செந்தில் மற்றும் ஜனகராஜின் காமெடி.
வடிவுக்கரசியின் வில்லத்தனம். ரஜினியின் நடிப்பில் வெளியான ஒரு தரமான மசாலா படம் தான் அருணாச்சலம்.