வரும் டிசம்பர் 13-ஆம் தேதி புதுச்சேரி அரசின் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முக்கியமான ஒரு சில படங்கள் விருதுக்காக தேர்வாகியுள்ளது. இந்த விழாவில் மம்முட்டியும் ஜோதிகாவும் இணைந்து நடித்த காதல் தி கோர் படம் செலக்ட் ஆகியுள்ளது.
இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார் ஜோதிகா. சமீப காலமாக ஜோதிகா நல்ல தரமான, கதைகள் உள்ள படத்தில் நடித்து வருகிறார். அப்படி மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஜியோ பேபி இயக்கத்தில் காதல் தி கோர் படத்தில் நடித்திருந்தார். இதில் இவரது நடிப்பை பார்த்து மலையாளத்தில் பல ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.
சிக்கலான கதை.. சிறந்த படம்
இந்த படத்தை பற்றி ஒரே வார்த்தையில் கூறவேண்டும் என்றால், சிக்கலான கதை சிறந்து படம் என்று தான் கூறவேண்டும். மாத்தியூ என்ற கதாபாத்திரம் மம்முட்டி நடித்திருப்பார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியை முன்னிலை படுத்தி போட்டியிடுவார். அதில் ஜோதிகாவுக்கு உடன்பாடில்லை.
நிச்சயம் ஜெயித்துவிடுவார் என்று தெரிந்தவுடன், விவாகரத்து கோருவார். விவகாரத்துக்கான காரணமாக மாத்தியூ ஒரு ஓரினசேர்க்கயாளர் என்றும் அவர் பல வருடமாக அவரது நண்பர் ஒருவருடன் உறவில் இருப்பதாகவும், ஒரு காரணத்தை சொல்லி விடுவார்.
இது வீட்டிலும், நாட்டிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, பேசுபொருளாக மாறி விடும். இதை தொடர்ந்து என்ன நடக்கும் என்பது தான் மீதி கதை. பொதுவாக இந்த டாபிக் மிகவும் sensitive-ஆன ஒன்று. அதை மிகச்சிறப்பாக கையாண்டு இருப்பார் இயக்குனர். மேலும் நடிப்பு மூலம் மம்முட்டியும், ஜோதிகாவும் உயிர் கொடுத்திருப்பார்.