நடிகர் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவரின் கட்சி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். மேலும் இதை தொடர்ந்து அவர் அரசியலில் பயணிக்க இருப்பதால், ரசிகர்கள் பலர் அவருக்கு தொண்டனாக மாறி வருகிறார். இவரது கொள்கையும் பலருக்கு பிடித்திருக்கிறது.
மேலும் அஜித் ரசிகர்கள் கூட, அஜித் ரசிகன், விஜய் தொண்டன் என்று கூறி வருகிறார்கள். இதனால், சிறுவர்கள் முதல் அனைவரும் அரசியல் பற்றி தெரிந்துகொண்டு விஜயுடன் பயணிக்க மிகுந்த விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் மற்ற கட்சிகளிடம் இருந்து நாளுக்கு நாள் அதிகமான வெறுப்பையும் இவர் சம்பாதித்து வருகிறார்.
திடீரென்று கோவா-க்கு கிளம்பிய விஜய்
இப்படி இருக்க, சீக்கிரம் படத்தை முடித்துவிட்டு கட்சி பணியை பார்க்க வேண்டும் என்று விஜய் ஆவலாக இருக்கிறார். அதே நேரத்தில் பட ஷூட்டிங்-க்கு நடுவில் திடீரென்று அவர் கோவாக்கு கிளம்பி போயுள்ளார். இன்று கீர்த்தி சுரேஷின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் பங்கேற்க தான் முதல் ஆளாக அவர் சென்றுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் விஜயுடன் இணைந்து 2 படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி, அவர் விஜயின் தீவிர ரசிகையும் கூட. அவர் மட்டுமல்ல, அவர் தற்போது கரம் பிடித்திருக்கும், அவரது அன்டனி தட்டிலும் ஒரு தீவிர விஜய் ரசிகர்.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷுடன் விஜய்-க்கு நல்ல நட்பு இருந்த நிலையில், திருமணத்தில் கலந்து கொள்வதற்காக முதல் ஆளாக கிளம்பி வந்துள்ளார்.
அவர் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே மக்களிடம் இருந்த நிலையில், இத்தனை பிஸியான Schedule-க்கு நடுவில் கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்காக நேரம் ஒதுக்கி வந்துள்ளார். இது மனமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.