வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஜனவரியில் துபாய் செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. எதுக்கு தெரியுமா? பெரிய சம்பவம் இருக்கு

இன்று சூப்பர் ஸ்டார் அவரது 74-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் அவரது அடுத்த படமான கூலியை தான் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். லோகேஷ் கனகராஜின் படம் என்பதாலையே படத்தின் மீது 200 சதவீத நம்பிக்கையை ரசிகர்கள் வைத்துள்ளார்கள்.

இப்படி இருக்க தற்போது கூலி ஷூட்டிங்-க்காக ஜெய்ப்பூரில் இருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அங்கு அமீர்கானுடன் இருக்கும் portions அனைத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்தத் நிலையில், சூப்பர்ஸ்டார் ஜனவரியில் டுபாய் கிளம்பவுள்ளார். எதற்கு தெரியுமா?

வெளியான முக்கிய அப்டேட்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அவர் பிறந்த நாள் அன்று கூட தொடர்ந்து ஷூட்டிங்-ல் அழைத்துக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் கூலி படத்தை பற்றி ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.

தற்போது ஜெய்ப்பூர்-ல் ஷூட்டிங்கை முடித்தபிறகு, விசாகப்பட்டினம் செல்லவுள்ளனர் படக்குழுவினர். அங்கு சின்ன portions சூட் செய்து முடித்தபிறகு, ஹைதெராபாத் செல்லவுள்ளனர்.

அங்கு உள்ள ஷூட்டிங் முடிந்த பிறகு, 2025 ஜனவரி துபாய் செல்லவுள்ளனர் கூலி படக்குழு. அங்கு நீண்ட நாள் ஷூட்டிங் நடக்கும் என்று கூறப்படுகிறது.

அத்துடன், முடித்துவிட்டு மிச்ச மீதி ஷூட்டிங்-ல ஏதாவது patch work இருந்தால் அதையும் முடித்துவிட்டு மார்ச் மாதம் போஸ்ட் production பணிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

இதற்க்கு நடுவில் தலைவியார் பிரேக் எடுக்க கூட நேரமில்லை. அடுத்தது ஜெயிலர் 2 படம் ஆரம்பமாகிவிடும். அதற்காக நிற்காமல் ஓட ஆரம்பித்துவிடுவார் சூப்பர் ஸ்டார். தனது 74 வயதிலும் 24 வயது இளைஞர் போல உழைக்கும் சூப்பர்ஸ்டாரை பல technicians பிரம்மிப்போடு பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News