வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

president ஆன ஆஸ்கர் நாயகன்.. இந்தியாவின் பெருமையை உயர்த்தி பிடித்த ரஹ்மான்

2 முறை ஆஸ்கார் விருதுகளை தட்டி தூக்கிய ரஹ்மான் மூன்றாவது முறையாக ஆடுஜீவிதம் படத்துக்காக ஆஸ்கார்-க்கு தேர்வாகியுள்ளார். இயக்குனர் மணிரட்ணம் இயக்கத்தில் முதன்முறையாக இசையமைத்து, புதிய வகையான இசையை நம் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

முதல் படத்திலே எல்லா பாடலும் வேற லெவல் ஹிட். இன்றளவும் எவெர்க்ரீன் பாடல்காளாக அந்த பாடல்கள் உள்ளது. இந்த நிலையில், தற்போது ஆஸ்கார் நாயகனுக்கு புதிய ஒரு கெளரவம் கிடைத்துள்ளது. புது அனுபவத்தை நம் மக்களுக்கு கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக slum dog millionaire படத்தின் இசைக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது.

president ஆன ஆஸ்கார் நாயகன்..

இப்படி இருக்க திறமையில் மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்துகொண்ட ரஹ்மானுக்கு சமீபத்தில் விவாகரத்து என்ற செய்தி வெளியாகி அவருக்கும் நமக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

ஆனால் இது சின்ன மனஸ்தாபம் மட்டும் தான். அதை அவர்கள் குழந்தைகள் பேசி சரி செய்துவிட்டனர்.

இப்படி இருக்க, Trinity Laban இசைப்பள்ளியின் கௌரவ தலைவராக ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் 5 ஆண்டுகள் இவர் இருப்பார். இது ரஹ்மானுக்கு கிடைத்த பெருமையாக பார்ப்பதை விட, பலர் இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகவே பார்க்கின்றனர்.

மேலும் ஆஸ்கார் நாயகன், சமீபத்தில் பல படங்களில் இருந்து விலகியது கவலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கிடைத்த கௌரவ பட்டம், பல ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

- Advertisement -

Trending News