புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சத்யராஜ் மோசமா வில்லத்தனம் பண்ணிய படங்கள்.. கிளைமாக்ஸ் முடிஞ்சோனா எத்தனை பேரு சாபத்தை வாங்குனாரோ

நடிகர் சத்யராஜ் வில்லனாக இருந்து சினிமாவில் ஹீரோவாக முன்னேறியவர். வில்லனாக நடித்தாலும், அவரது ஆளுமை, குரல், ஸ்டைல், நடிப்பு என எல்லாமே ஹீரோவுக்கு டப் கொடுக்கும் வகையில் இருக்கும்.

கமல்ஹாசன் – ஸ்ரீபிரியா நடிப்பில், டி.என்.பாலு இயக்கத்தில் உருவான படம் சட்டம் என் கையில். இப்படத்தை டி.என்.பாலுவே தயாரித்திருந்தார். சத்யராஜ் திரையில் தோன்றிய முதல் படம் இது. அதன்பின் அவர் வில்லனாக நடித்து மிரட்டிய படங்கள் பற்றி பார்க்கலாம்.

சாவி

சத்யராஜ், சரிதா, அம்ஜத்குமார், சிங்காரம், ரவி, அனுராதா, சாந்தி ஆகியோர் நடிப்பில், கார்த்திக் ரகு நாத் இயக்கத்தில் 1985 ல் வெளியான படம் சாவி. இப்படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார். இது dial m for murder என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் ஆகும். இதில் சத்யராஜ் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடிப்பில் மிரட்டியிருந்தார்.

நூறாவது நாள்

ஹாலிவுட் படத்துக்கு நிகரான த்ரிலிங் படம். விஜயகாந்த், மோகன், சத்யராஜ், நளினி என மல்டி ஸ்டார் படமாக அமைந்து நூறாவது நாள். இதை மணிவண்ணன் இயக்கினார். 1977 ஆம் ஆண்டு வெளியான இத்தாலிய படமான sette note ன் நீரோவின் தழுவலாக இப்படம் உருவானது. சத்யராஜ், மோகன் வில்லனாக மிரட்டியிருந்தனர்.

24 மணி நேரம்

மோகன், சத்யராஜ், ஜெய்சங்கர், ஜெயமாலினி, செந்தில், அனுராதா, வடிவுக்கரசி என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். மணிவண்ணன் இயக்கிய இப்படம் கடந்த 1984ல் வெளியானது. இப்படத்தில் சத்ய ராஜின் வில்லன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வித்தியாசமான கெட்டப்பில் அவர் நடித்தது இன்று வரை பலராலும் பாராட்டப்படுகிறது. இப்படம் 27 வாரங்கள் ஓடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமைதிப்படை

சத்யராஜ் கேரக்டரில் முக்கியமான படம். அவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார். ஹீரோயினாக ரஞ்சிதா, கஸ்தூரி இருவரும் நடித்திருந்தனர். மணிவண்ணன் இயக்கினார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்.1994 ல் வெளியான இப்படம் இன்றும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

காக்கிச் சட்டை

கமல், அம்பிகா, மாதவி,ராஜிவ் நடிப்பில், ராஜசேகர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்திருந்தார். கமல் – சத்யராஜ் திரையில் தோன்றும் காட்சிகள் அனல் பறக்கும். இருவருமே ஸ்கிரீன் பிரெசென்ஸிலும், நடிப்பிலும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தனர். அன்றைய காலக்கட்டதில் வில்லன் வேடத்துக்கு தன்னை விட யாரும் பொருத்தமில்லை என கிடைத்த வாய்ப்புகளை நிரூபிக்கும் வகையில் சத்யராஜ் மிரட்டியிருப்பார். இப்படமும் அதற்கு ஒரு உதாரணம்.

விக்ரம்

கமல், லிஸி, டிம்பிள் கபாடியா, சாருஹாசன், ஜனகராஜ் நடிப்பில், ராஜசேகர் இயக்கத்தில் உருவான படம் விக்ரம். சத்யராஜ் இதில் வில்லனாக நடித்தார். கமலே தயாரித்திருந்தார். 1986 ல் வெளியான இப்படம் சூப்பர் ஹிட். வில்லனாகவும் நடித்து கமலுக்கு டப் கொடுத்திருந்தார் சத்யராஜ். இப்படம் அப்போதே 8 கோடி வசூலித்து குறிப்பிடத்தக்கது.

இசை

எஸ்.ஜே.சூர்யா , சுலங்கா நடிப்பில் உருவான படம் இசை. சத்யராஜ் மூத்த இசைக்கலைஞனாகவும், வளரும் இசைக்கலைஞனான எஸ்.ஜே.சூர்யாவின் மீது பொறாமைப்பட்டு, அவரை வளரவிடாமல் தடுக்கும் மூத்த இசையமைப்பாளர் கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார். 2015 ல் வெளியான இப்படம் 26 கோடி வசூல் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News