வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

நவுர்றா இது தேவா என்ட்ரி.. சிக்கிடு செய்த சாதனை, அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

Coolie: இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 74-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நேற்றிலிருந்து அவரின் ரசிகர்கள் இதை மீடியாவில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அதற்கு காரணம் இன்று அவர் நடித்து வரும் கூலி படத்தின் அப்டேட் தான். அவர்களை ஏமாற்றாமல் சன் பிக்சர்ஸ் மாலை 6 மணிக்கு அசத்தல் க்லிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது.

சிக்கிடு வைப் என்ற பெயரில் வெளியான அந்த வீடியோ வேற லெவலில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. டி ராஜேந்தர் குரலில் சூப்பர் ஸ்டார் நீண்ட நாட்களுக்குப் பிறகு குத்தாட்டம் போட்டுள்ளார்.

சிக்கிடு செய்த சாதனை

இது நிச்சயம் ரசிகர்களுக்கான மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான். தலைவரின் பிறந்தநாளுக்கு அவருக்கு ட்ரீட் கிடைத்ததோ இல்லையோ தற்போது இதை ரஜினி வெறியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வேண்டும் எனவும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது சிக்கிடு வெளியான சில நிமிடங்களில் யூடியூப் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதை மகிழ்ச்சியுடன் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. இனி இன்ஸ்டாகிராமில் இந்த ரீல்ஸ் பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த வயதிலும் அனைவரையும் ஆடவைக்கும் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்து வருகிறது. அதில் கூலி டீம் கொடுத்த ட்ரீட் வேற லெவலில் உள்ளது.

- Advertisement -

Trending News