ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அல்லு அர்ஜூன் மாதிரி பல விவகாரங்களில் கைதான நடிகர்கள்…

புஷ்பா 2 படம் 1000 கோடிக்கு மேல் வசூல் குவித்ததை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அல்லு அர்ஜூன் இன்று கைது செய்யப்பட்டார். இந்திய சினிமாவில் பிரபல நடிகர்கள் கைது செய்யப்பட்டது குறித்து இதில் பார்க்கலாம்.

தர்ஷன்

ரசிகரை கொலை செய்த வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டார். கர்நாடக காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையிலும் அவர் பெயர் இருந்தது. அவர் முதுகு அறுவைச் சிகிச்சை செய வேண்டி, ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த அக்டோபரில் அவருக்கு 6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

சல்மான் கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஹம்ன் சாத் சாத் ஹெயின் படத்தில் நடிக்க கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் சென்றிருந்தார். அப்பொழுது அக்டோபர் 1 ஆம் தேதி சாயீப் அலிகான், தபு சோனாலி, நீலம் ஆகியோருடன் காட்டுக்குள் சென்ற அவர்கள் , பிளாக் பக் என்ற அரியவகை மானை வேட்டையாடியதாக புகார் அளிக்கப்பட்டு, 5 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. 20 ஆண்டுகள் இவ்வழக்கு நடந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சஞ்சய் தத்

கடந்த 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ல் தேச விரோத நடவடிக்கைகள் சட்ட த்தின் கீழ் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் மூலம் 1995 ஆம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் வரை 16 மாதங்கள் அவர் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

அல்லு அர்ஜூன்

டிசம்பர் 5 ஆம் தேதி அதிகாலையில் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 பட த்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜூன் வந்தார். அப்போது கூட்டம் அதிகமானது. அங்கு நின்றிருந்த போலீசாராலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கரின் மனைவி ரேவதி(39) உயிரிழந்தார்.

அவரது மகன் வயது 9, சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜூன் 25 லட்சம் நிதியுதவியும், சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் சிகிச்சைசெலவை ஏற்பதாக கூறினார். இவ்விவகாரத்தில் தியேட்டர் ஓனர், மேனேஜர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே அல்லுஅர்ஜூன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

பவர் ஸ்டார் சீனிவாசன்

அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் பவன் ஸ்டார் சீனிவாசன். அவர் பல கோடி கடன் வாங்கித் தருவாதாகக் கூறி 10 கோடி கமிஷன் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News