புதன்கிழமை, ஜனவரி 22, 2025

2024ல் மறைந்த தமிழ் சினிமா பிரபலங்கள்.. பேரிழப்பாய் அமைந்த டெல்லி கணேசின் மரணம்

Nethuran: 2024 ஆம் வருடம் முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் தான் இருக்கின்றன. இந்த வருடம் எத்தனையோ சந்தோஷமான நிகழ்வுகளையும், சோகமான தருணங்களையும் கொடுத்திருக்கிறது.

அதுபோலத்தான் சில கலைஞர்களின் மரணமும். இந்த வருடத்தில் உயிரிழந்த தமிழ் சினிமா பிரபலங்களை இந்த செய்தியின் மூலம் நினைவு கூறலாம்.

2024ல் மறைந்த தமிழ் சினிமா பிரபலங்கள்

டெல்லி கணேஷ்: காமெடி, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அத்தனையிலும் பட்டையை கிளப்ப கூடியவர் நடிகர் டெல்லி கணேஷ்.

அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பால் மிரள வைத்திருப்பார். இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்து விட்டார்.

பிரதீப் கே.விஜயன்: காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர் பிரதீப் கே.விஜயன். இவர் தன்னுடைய 45 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

தெகிடி, லிப்ட், இரும்புத்திரை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

சூர்யா கிரண் (குட்டி ரஜினி): நடிகர் மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர் என்ற பன்முக திறமை கொண்டவர் சூர்யா கிரண். இவர் படிக்காதவன் படத்தில் சின்ன வயது ரஜினி ஆக நடித்திருப்பார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் நடித்த நடிகை சுஜிதாவின் சகோதரர் இவர். புற்றுநோயால் காலமானதாக சொல்லப்படுகிறது.

நேத்ரன்: சமீபத்தில் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம் சீரியல் நடிகர் நேத்ரனின் மரணம். இளம் வயதில் இவர் புற்றுநோயால் காலமானார்.

Trending News