சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பிரபுதேவா கேரியரை தூக்கிவிட்ட ஒரே பாடல், அதுவும் சத்யராஜ் படத்தில்

சத்யராஜ் நடிப்பில், பி.வாசுவின் இயக்கத்தில் கடந்த 1993 ல் வெளியான படம் வால்டர் வெற்றிவேல். இப்படத்தில் சுகன்யா, ரஞ்சிதா, விஜயகுமார், நாசர்,கவுண்டமணி, பிரபுதேவா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.

அப்போது முன்னணி இயக்குனராக இருந்த பி.வாசுவின் திரைக்கதை, இயக்கம் என எல்லாமே பக்கா மாஸ் படமாக அமைந்திருந்தது.

போலீஸ் கேரக்டரில் சத்யராஜின் கம்பீரம், உயரம் அதிரடி ஆக்சன் காட்சிகள் என விறுவிறுப்பான ஸ்கிரீன் பிளேவில் படமும் சூப்பர் ஹிட்.

சூர்யாவின் சிங்கம் படம் மாதிரி அக்கால கட்டத்தில் எதிரிகளை பந்தாடும் வால்டர் வெற்றிவேலாக சத்யராஜ் கெத்து காட்டியிருந்தார். இப்படம் 200 நாட்களை தாண்டி ஓடியது. இதுதான் அவரது கேரியரில் அதிக நாட்கள் ஓடிய படம்.

சின்ன ராசாவே சிட்டெறும்பு உன்ன கடிக்குதாபாட்டுக்கு என்னா dance?

தமிழில் வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில், எஸ்.பி.பரசுராம், இந்தியில் கோவிந்தா நடிப்பில் குத்தார் என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றது.

இப்படத்தில், இளையராஜாவின் இசையில், ‘சின்ன ராசாவே சிட்டெறும்பு உன்ன கடிக்குதா’ என்ற பாட்டு வரும். இதில், பிரபுதேவாவும், சுகன்யாவும் போட்டி போட்டுக்கொண்டு நடனம் ஆடியிருப்பர்.

இப்பாடலில்தான் பிரபுதேவாவின் நடனம் ஆடும் திறமை முழுமையாக வெளியில் தெரிந்தது. கோடம்பாக்கத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளானது என கூறப்படுகிறது.

அதன்பின், பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் போட்டி போட்டுக்கொண்டு ஹீரோவாகவும், நடனம் அமைக்கவும் பிரபுதேவாவை ஒப்பந்தம் செய்தனர்.

அதற்கு சத்யராஜின் இப்படத்தில் இடம்பெற்ற பாடலும் ஒரு காரணம் என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

Trending News