சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

புஷ்பா 2 விவகாரத்தில் கைதான அல்லு அர்ஜூனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

நடிகர் அல்லு அர்ஜூன் முதலில் டாடி படத்தில் நட்புக்காக தோன்றினார். அதன்பின், 2003 ல் கங்கோத்ரி படம் மூலம் ஹீரோவாக நடித்தார்.

இப்படத்தில் நடித்த பின்னும் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. ஒருவருடம் வீட்டில் சும்மாதான் இருந்ததாக அவரே புஷ்பா 2 புரமோசனில் கூறியிருந்தார்.

அதன்பின், சுகுமார் இயக்கத்தில் ஆர்யா படத்தில் ஹீரோவாக அவர் நடித்தார். 2004ல் வெளியான இப்படம் சூப்பர் ஹிட். அதன்பின், தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜூனின் கேரியர் ஸ்டார்ட் ஆனது.

தொடர்ந்து ஆர்யா 2, வருடு, வேதம், பத்ரிநாத் உள்ளிட்ட படங்களில் நடிப்பு, நடனம் ஆக்சன் என அனைத்திலும் தன்னை நிரூபித்து, தெலுங்கில் முன்னணி நடிகர் ஆனார்.

ஸ்டைலிஸ் ஸ்டார் எனவும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். அவரது கேரியரில் இயக்குனர் சுகுமார் தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்யா படம் மூலம் பிரேக் கொடுத்தார்.

அதேபோல் 20 ஆண்டுகளுக்கு பின் 2021ல் புஷ்பா படம் மூலம் அல்லு அர்ஜூனை பான் இந்தியா ஸ்டாராக உயர்த்தினார். இப்படம் 300 கோடிக்கு மேல் வசூலீட்டியது. இப்படத்தில் நடிக்க அவர் 50 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

புஷ்பா 2 இமாலய வெற்றி – அல்லு அர்ஜீன் கைது!

3 ஆண்டுகள் கழித்து, அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா – ஃபகத் பாசில் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா 2.

இது 7 நாட்களில் 1000 கோடிக்கு மேல் வசூலீட்டியது. இந்திய சினிமாவின் குறுகிய நாட்களில் 1000 கோடி வசூலீட்டிய படமாக முதலிடம் பிடித்துள்ளது. முதல் நாள் வசூலிலும் தான். இப்படத்தில் நடிக்க 300 கோடி அல்லு அர்ஜூன் சம்பளம் வாங்கினார் என கூறப்படுகிறது.

புஷ்பா 2 முதல் நாள் சிறப்பு காட்சியைப் பார்க்க வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவர் இறப்புக்கு தியேட்டர் ஓனர்.

மேனேஜர் கைதான நிலையில் நேற்று அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீது குற்றம் நிரூபனமானால், அவருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

அல்லு அர்ஜீன் சொத்து மதிப்பு

அல்லு அர்ஜீன் பற்றியும், அவரது சொத்து மதிப்பு மதிப்பு பற்றியும் பலரும் இணையத்தில் தேடி வரும் நிலையில் அவரது சொத்து மதிப்பு 400 கோடிக்கு மேல் இருக்கலாம் என தகவல் வெளியாகிறது.

அவருக்கு ஐதராபாத் ஜீப்லி ஹில்ஸில் 100 கோடி மதிப்பிலான பங்களா, மும்பையில் சொகுசு பிளாட்கள் மற்றும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News