Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியை கம்பெனிக்கு வர விடாமல் இருக்க மித்ரா போட்ட திட்டத்தின்படி எல்லாமே சக்சஸ் ஆகிவிட்டது.
ஆனந்திக்கு கை மற்றும் காலில் பலத்த அடிபட்டு இருக்கிறது. வலியால் துடித்துக் கொண்டிருந்த ஆனந்தி அதன் பின்னர் தூங்கி விடுகிறாள்.
காலையில் வார்டன் வந்து பார்க்கும் பொழுது ஆனந்தி நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறாள்.
அவளுடைய தோழிகளும் வார்டனிடம் அவள் வலியால் இரவு முழுக்க தூங்கவே இல்லை இப்போது தான் தூங்குகிறாள் என்று சொல்கிறார்கள்.
அந்த நேரத்தில் ஆனந்தி திடீரென எழுந்து நான் கம்பெனிக்கு போக போகிறேன் என சொல்கிறாள்.
மகேஷிடம் சரண்டர் ஆகும் ஆனந்தி
நீ கம்பெனிக்கு போவதெல்லாம் சரிதான் இந்த மாதிரி உடல் நிலையில் உன்னால் அங்கு போய் வேலை செய்ய முடியாது என சொல்கிறார்கள்.
ஆனால் ஆனந்தி தன்னுடைய அக்காவின் திருமணம் நல்லபடியாக நடப்பதற்கு எனக்கு மகேஷ் சார் அறிவித்த போட்டி தொகை ஏழு லட்சம் ரூபாய் கிடைத்தே ஆக வேண்டும் என்று சொல்கிறாள்.
உடனே சல்மா இது குறித்து அன்புவுக்கு போன் பண்ணி சொல்லுகிறாள். சாப்பிட்டுக் கொண்டிருந்த அன்பு கை கழுவி விட்டு உடனே வெளியே கிளம்புகிறான்.
மேலும் அவனுடைய அம்மா தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக யாழினி இடம் நான் ஆனந்தியை பார்க்கப் போகிறேன்.
அவங்களுக்கு கீழே விழுந்து கையில் அடிபட்டு இருக்கிறது என்று சொல்லிவிட்டு செல்கிறான். இது அன்புவின் அம்மாவுக்கு பெரிய எரிச்சலை ஏற்படுத்துகிறது.
அதே நேரத்தில் ஹாஸ்டலில் ஆனந்தி சுளுக்கு பேண்டேஜை கை மற்றும் கால்களில் கட்டிக்கொண்டு ஹாஸ்டலின் வெளியே நடந்து வருகிறாள்.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அவ்வளவு அடிபட்ட பிறகும் ஆனந்தி கம்பெனிக்கு வந்து கொண்டிருப்பது மித்ராவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவளை துணி தைக்க விடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறாள். கடைசி நேரத்தில் அரவிந்த் ஏதோ ஐடியா கொடுப்பது போல் அந்த புரோமோ முடிந்து இருக்கிறது.
எது எப்படியோ ஆனந்திக்கு இப்படி ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று தெரிந்தால் மகேஷ் அவளுடைய அக்கா கல்யாணத்தை நடத்துவதற்கு கண்டிப்பாக பண உதவி செய்வான்.
அதே நேரத்தில் அன்புவின் அம்மாவுக்கு கோபம் அதிகமாக சீரியலில் சீக்கிரம் துளசி என்ட்ரி கொடுப்பது உறுதி.