விஜய் சேதுபதி தன்னை வளர்த்து விட்டவர்களை இன்றும் மறவாமல் அவர்களை தோள் கொடுத்து தூக்கி விடுகிறார். படம் இல்லாமல் கஷ்டப்படும் நண்பர்களை வான்டடாக கூப்பிட்டு, அவர்களுக்கு கால் சீட் கொடுத்து முன்னேறச் செய்கிறார்.
அவர் குணங்களை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல் இப்பொழுது நடிகர் ஒருவர் வளர்த்து விட்டவர்களை மறக்காமல் அவர்களுக்காக படம் பண்ணவிருக்கிறார். பழகுவதற்கும் மிக எளிமையான மனிதராகவும் இருந்து வருகிறார்
வாடகை வீடு, தனக்கு உரிமையான ஒரு பைக் என கதை கேட்க வருவதும், சூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதுமாய் இருக்கிறாராம். இப்படி ரொம்ப எளிமையாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர் ஜெய் பீம் மணிகண்டன்.
குட் நைட் பட வெற்றிக்கு பிறகு இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம். ஆனால் இவர் வருகின்ற அந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளாமலும், அதிகமாக சம்பளம் கேட்காமலும் இன்றுவரை தன்னுடைய சந்தோஷம் போதும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தன்னை சினிமாவில் வளர்த்து விட்டவர்களுக்காக அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுத்து வருகிறார். இப்பொழுது கூட தனது நண்பர் தியாகராஜா குமாரராஜாவுக்காக ஒரு படம் பண்ணுவதற்காக ஒப்பந்தமாகி இருக்கிறார். விஜய் சேதுபதி இவரை போல் தான் தன்னை வளர்த்து விட்டவர்களை மறக்காமல் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.