திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

விக்னேஷ் சிவன் வாங்க நினைத்த ஹோட்டலை ஏற்கனவே வாங்கிய தளபதி.. அட! இது எப்போ நடந்துச்சு?

Nayanthara: நடிகை நயன்தாரா ஒரு திட்டம் போடுவதற்குள் அதை செயல்படுத்தி இருக்கிறார் நடிகர் விஜய்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியின் அரசு ஹோட்டல் ஒன்றை விக்னேஷ் சிவன் விலைக்கு வாங்க முயற்சி செய்ததாக செய்தி வெளியானது.

இது தமிழகத்தில் பெரிய அளவில் பேசு பொருளாகவும் மாறியது. இதற்கு காரணம் அரசாங்கத்தின் பொறுப்பில் இருக்கும் ஹோட்டலை விலைக்கு வாங்க நினைத்தது தான்.

சமீப காலமாகவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள்.

அட! இது எப்போ நடந்துச்சு?

தனுஷுக்கு எதிராக அறிக்கை விட்டதிலிருந்து இவர்களுக்கு நேரம் சரியில்லை என்று கூட சொல்லலாம்.

அதிலும் சமீபத்தில் நயன்தாரா கொடுத்த பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு சேனலை சேர்ந்தவர்களை மூன்று குரங்குகள் என்று சொல்லி இருந்தார்.

அதே நேரத்தில் இந்த ஹோட்டல் விவகாரமும் நடந்ததால் அவர்கள் இதை ஒரு பூதாகரமான விஷயமாக மாற்றி இருந்தார்கள்.

அரசு ஓட்டலை விலைக்கு வாங்க நினைத்தார்கள் என்று செய்திகள் பரவி வருகிறது. அதாவது புதுச்சேரி அரசாங்கம் பொறுப்பில் இருக்கின்ற ஹோட்டல்கள் தான் இது.

நயன்தாரா வாங்க நினைத்தது கடற்கரையோடு சேர்ந்து இருக்கும் ஹோட்டல். அதாவது இந்த ஹோட்டல்களை புதுச்சேரி அரசாங்கம் டெண்டர் விட்டு விற்பதாக சொல்லப்படுகிறது.

இதனால்தான் விக்னேஷ் சிவன் நேரடியாக அணுகியதும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் நடிகர் விஜய் டெண்டர் முறையில் இந்த ஹோட்டலை வாங்கி விட்டாராம். இது அவருடைய கட்சியின் முக்கிய பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் நடைபெற்றதாக தெரிகிறது.

Trending News