சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அரசியல் நம்மை சுற்றியும் நடக்கும், நம்மை வச்சும் நடக்கும்.. விஜய் சேதுபதி ஜெஃப்ரியை அலற விட்ட தருணம் !

Bigg Boss 8: ஓவர் நைட்டில் ஒபாமா ஆகி விட்டான் என்று சொல்வார்கள். அப்படித்தான் ஒரே ப்ரோமோவில் விஜய் சேதுபதி பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் எட்டாவது சீசன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் போது கமல் அளவுக்கு இருக்குமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.

தொடர்ந்து விஜய் சேதுபதியின் பேச்சு ஒரு விதமான கலவையான விமர்சனத்தையே பெற்றது. போன வாரம் கோவா குரூப்புக்கு ஆப்பு வைத்ததும் கொஞ்சம் விஜய் சேதுபதி மீது மக்களுக்கு நம்பிக்கை வந்தது.

இந்த வாரம் வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அடிச்சு தூக்கி விட்டார் விஜய் சேதுபதி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மேனேஜர் vs தொழிலாளர்கள் என்ற டாஸ்க் நடைபெற்றது.

விஜய் சேதுபதி ஜெஃப்ரியை அலற விட்ட தருணம் !

இதில் சிறப்பாக விளையாடுபவர்கள் மேனேஜர்களாகவும், அடுத்த கட்டத்தில் இருப்பவர்கள் தொழிலாளர்களாகவும் விளையாடினார்கள்.

தொடர்ந்து கொடுக்கப்படும் டாஸ்க், வேலை இவற்றால் வீட்டிற்குள் ஏகப்பட்ட சண்டை சச்சரவும் வந்தது.

ஒரு வழியாக இந்த டாஸ்கை நன்றாக விளையாடியவர்களுக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தார்.

இதில் மஞ்சரி, தீபக், சத்யா, பவித்ரா, ஜெஃப்ரி என ஒரு ஆறு பேர் லிஸ்டில் வந்து சேர்ந்தார்கள். கடைசியாக ஜெஃப்ரி தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பாஸ் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி இது குறித்து தான் பேசி இருக்கிறார்.

அதாவது இந்த டாஸ்கை யார் சிறப்பாக விளையாடினார்கள் என விஜய் சேதுபதி கேள்வி கேட்கிறார். அதற்கு எல்லோரும் ஒரே குரலாக தீபக் என்று பதில் அளிக்கிறார்கள்.

அப்போ பாஸ் எதற்கு ஜெஃப்ரிக்கு பாஸ் போச்சு என்று கேட்கிறார். மேலும் ஜெஃப்ரி எழுந்து நின்றவுடன் அரசியல் சில நேரம் நம்மை சுற்றியும் நடக்கும், நம்மை வைத்தும் நடக்கும்.

இந்த பாஸ் கொடுத்து உன்னை வீக்கான போட்டியாளர் போல் அவர்கள் காட்டியது உனக்கு புரியவில்லையா என்று கேட்கிறார்.

இதற்கு ஜாக்குலின் கைதட்டுவது போல் அந்த வீடியோ முடிந்திருக்கிறது.

விஜய் சேதுபதி இந்த பாஸ் பற்றி விசாரிக்க போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. பாசை வாங்கி யாருக்காவது கொடுக்கிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News