திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தமிழில் யாருக்கும் படம் எடுக்கத் தெரியல.. கல்யாணத்துக்கு பின் ஏழரை கூட்டிய சித்தார்த்

தமிழில் யாருக்கும் படம் எடுக்கத் தெரியவில்லை என்று சித்தார்த் தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. கன்னத்தில் முத்தமிட்டாய் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும், பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரீ கொடுத்தவர் சித்தார்த்.

இதையடுத்து, தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்த நிலையில் தமிழில் நடிக்கவில்லை.
மீண்டும் 2011 ல் பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார் சித்தார்த்.

அதன்பின் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா, அரண்மனை, காவிய தலைவன், சிவப்பு மஞ்சல் பச்சை, அருவம் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அப்படங்கள் எல்லாம் கலவையான விமர்சனங்கள் பெற்றன. 2023ல் எஸ். யு. அருண்குமாரின் சித்தா படம் சித்தார்த்துக்கு பிரேக் கொடுத்தது.

அதன்பின், இந்தியன் 2 படத்தில் அவர் கேரக்டரும், நடிப்பும், அவர் புரமோசனில் பேசியதும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

என்.ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் , ஆஷிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ் யூ. இப்படம் டிசம்பர் 13ல் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருகின்றது.

தமிழில் சொல்லிக் கொள்ளுமளவு படங்கள் வருவதில்லை

சமீபத்தில் சித்தார்த் அளித்த பேட்டியில்,” தமிழில் சொல்லிக் கொள்ளுபடியான படங்கள் வருவதில்லை. 50 வருடங்களுக்கு முன்பு இருந்த இயக்குனர்களின் படங்க்ளுடன் கம்பேர் செய்தால், இப்போது வருவதெல்லாம் ஒன்னுமே இல்லை.

யாருக்கும் டைரைக்‌ஷன் வரவில்லை என தோணுது. தமிழில் நான் கடைசியாக பார்த்து ரசித்த ரொமாண்டிக் படம் அலைபாயுதே. 90 ஸில் நான் தியேட்டரில் விஜய் பண்ணிய படங்கள் ரொம்ப பிடிக்கும்.

காதலுக்கு மரியாதை, அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம் படங்களை தியேட்டரில் பார்த்து ரசித்தேன்” என்று
தெரிவித்துள்ளார்.

Trending News