சூப்பர்ஸ்டார் ரஜினி படம் என்றாலே பெரிய ஹைப் இருக்கும். ஆனால் இந்த 2024-ஆம் ஆண்டில் வெளியான அவற்றின் வேட்டையன் படத்துக்கு பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை.
அதற்க்கு காரணம் லைக்காவின் ப்ரோமோஷன் சரி இல்லை என்பது ஒரு புறமாக இருந்தாலும், மறுபுறம், ட்விட்டரில் படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே வேட்டையன் டிசாஸ்டர் எனும் ஒரு ஹாஷ்டாகை ட்ரெண்ட் செய்தார்கள்.
மேலும் படத்தின் கதை நன்றாக இருந்தபோதிலும், வேண்டுமென்றே படம் நன்றாக இல்லை என்று தொடர்ந்து விமர்சனம் கொடுத்து வந்தார்கள்.
ஒரு வகையில், இந்த படம் ஒரு Usual-ஆன சூப்பர்ஸ்டார் படம் போல இல்லையென்றாலும் கூட, அவ்வப்போது சூப்பர்ஸ்டார் படங்களில் எலிமெண்ட்ஸ் வைத்துளார்கள். அது சரியாக இல்லையென்றாலும் மோசமாக விமர்சிக்கும் அளவுக்கு இல்லை என்பது தான்.
இந்த நிலையில், படத்தை எதோ ஒரு முறை கூட தியேட்டரில் பார்க்க முடியவில்லை என்ற அளவுக்கு விமர்சனம் செய்திருந்தார்கள் ஒரு சிலர்.
உண்மையில் காட்டு மொக்கை படமாக இருந்தால் கூட கொஞ்ச மன ஆறுதல் கிட்டிருக்கும். ஆனால் ஓரளவுக்கு நல்ல படத்தை ஓட விடாமல் செய்துவிட்டார்கள்.
கள்ளிப்பால் கொடுத்து கொன்னுட்டானுங்க!
சமீப காலமாக விமர்சனங்கள் வேண்டாம். படம் பார்க்கும் Experience-ஐ கெடுத்து விடுகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் ஒரு படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை மக்கள் சொல்லட்டும்.. விமர்சகர்கள் வேண்டாம் என்று தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
இப்படி இருக்க வேட்டையன் படம் இயக்குனர் ஞானவேலுக்கு எந்த அளவுக்கு ஒரு ஆரா வடுவாக மாறி உள்ளது என்பதை அவர் கூறியிருக்கிறார்.
வேட்டையன் படத்தை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் வேண்டும் என்றே மோசமான விமர்சனங்களை கொடுத்து கள்ளிப்பால் ஊற்றி கொண்ணுவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார். எந்த அளவுக்கு வலி இருந்தால் இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருப்பார் என்று தான் தோன்றியுள்ளது.