திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

குணசேகரனின் தங்கைக்கு எதிர்நீச்சல் 2வில் இடமில்ல.. புது சீரியலுக்கு கதாநாயகியாக கொக்கி போட்டு இழுத்த விஜய் டிவி

Vijay Tv New Serial: சீரியலைப் பொறுத்தவரை சன் டிவி தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனாலும் சன் டிவியுடன் போட்டி போடும் அளவிற்கு விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சில சேனல்கள் தொடர்ந்து புது சீரியல்களை இறக்கிக் கொண்டு வருகிறார்கள். அதிலும் தற்போது சன் டிவி, மாதத்திற்கு இரண்டு மூன்று புது சீரியல்களை இறக்கி மக்களின் ஃபேவரிட் சீரியல்களின் இரண்டாம் பாகத்தையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் சன் டிவி அடுத்தடுத்து தந்திரமாக செயல்பட்டு வரும் காரியத்தினால் யாருமே கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு சன் டிவி சேனல் மக்களிடத்தில் வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சன் டிவி சீரியலில் நடிக்கும் பிரபலங்களில் யார் மக்களிடத்தில் அதிகமாக கவர்ந்திருக்கிறார்களோ, அவர்களில் ஒவ்வொருவராக விஜய் டிவி தூக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக ஜொலித்து வந்த மதுமிதா தற்போது விஜய் டிவியில் அய்யனார் துணை என்ற நாடகத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கப் போகிறார். இதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் தங்கையாக பிரபலமான ஆதிரையும் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதில்லை.

ஏனென்றால் அவருக்கு முக்கியமான கதாநாயகி பொறுப்பை விஜய் டிவி கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் புத்தம் புது சீரியலான தனம் என்ற டைட்டிலுடன் ஆதிரை கமிட் ஆகியிருக்கிறார். ஏற்கனவே இவருக்கு சன் டிவி சீரியல் மூலம் அதிக வரவேற்பு கிடைத்ததன் மூலம் விஜய் டிவியில் கூடிய சீக்கிரத்தில் பிரபலமாகி மக்களிடத்தில் இவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News