இந்திய சினிமா நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இந்தி சினிமாவுக்கு போட்டியாக தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமா துறைகளும் மிக வேகமாக முன்னேறியுள்ளது.
இது ஒரு புறம் இருக்க தற்போது உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு பல படங்கள் வர ஆரம்பித்து இருக்கின்றன எடுத்துக்காட்டாக “தி காஷ்மீரி பைல்ஸ்”, “கேரளா ஸ்டோரி” போன்ற படங்கள் அங்கு நடந்த பிரச்சனைகளை எடுத்துக் கூறுகிறது.
இந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் படம் தான் “தி சபர்மதி ரிப்போர்ட்”. இதில் விக்ராந்த் மாசி கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படம் 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாகக் கொண்டது. இதில் 59 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்கள் அனைவரும் அயோத்தியா கோயிலில் நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பியவர்கள்.
இந்த சம்பவத்தை பற்றி துப்பு துலக்கும் ஜர்னலிஸ்ட் கதைதான் இந்த சபர்மதி ரிப்போர்ட் படத்தின் மையக்கருத்தாகும்.
இந்தப் படத்தை படக்குழுவினர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் பார்த்தனர். அதைப் பற்றி பேசிய படத்தின் நாயகன் பிரதமர் மோடி அவர்கள் எங்களை மிகவும் பாராட்டியதாகவும் அப்பொழுது அவருடைய கண்கள் கலங்கி இருந்ததாகவும் கூறியுள்ளார்.
உண்மை சம்பவமாக இருந்தால் கண்கள் கலங்கத்தான் செய்யும் பிரதமராக இருந்தாலும் அவரும் மனிதன் தானே!!.