அஜித்தின் விடாமுயற்சி படம் இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருக்கிறது. குட் பேட் அக்லி ஷூட்டிங் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைகிறது. இதை முடித்துவிட்டு அஜித் பேங்காக் செல்கிறார். அங்கேதான் விடாமுயற்சி சூட்டிங் மீதம் இருக்கும் காட்சிகள் எடுக்க இருக்கின்றனர்.
அந்தப் படத்திற்கு ஒரு பாடல் காட்சி எடுக்க வேண்டும் அதன் பின்னர் பேட்சப் வேலைகள் தான் மீதம் இருக்கிறது. இப்பொழுது மொபைல் டப்பிங் மூலம் வெகு விரைவாக டப்பிங் வேலைகளை முடிக்கிறார் அஜித். குட் பேட் அக்லி படம் 90 சதவீதம் முடிந்து விட்டது.
இந்த இரண்டு படத்தையும் டிசம்பர் 31ஆம் தேதியோடு ஓரம் கட்டுகிறார். அதன் பின்னர் 2025 இல் ஆண்டு எந்த படமும் இல்லை என்று அவரைச் சார்ந்த நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது. குடும்பத்திற்காகவும், அவர் தனிப்பட்ட விஷயங்களுக்காகவும் அந்த ஆண்டை செலவழிக்க போகிறாராம்.
குறிப்பாக அந்த ஆண்டு நடக்கவிருக்கும் பைக் மற்றும் கார் ரேஸ்களில் கலந்து கொள்வதற்காக பிரத்தியேக பயிற்சி எடுக்க போகிறாராம். படங்களுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் பிரேக் எடுக்கும் முடிவில் இருக்கிறார்.
ரேசில் கலந்து கொள்ளும் சமயத்தில் எந்த ஒரு இடையூறும் இருக்கக் கூடாது என்பதற்காக தெளிவாக இப்பமே காய் நகர்த்தி வருகிறார். ரேஸுக்கு கிளம்பிய பின் அதை பாதியில் விட்டுவிட்டு இங்கே வர முடியாது இப்படித்தான் சென்ற முறை நடித்த படத்தை பாதியில் விட்டு விட்டு சென்றார். இம்முறை தெளிவாக எல்லாத்தையும் முடித்துவிட்டு செல்கிறார்.