திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

சொந்தங்கள் செய்த சூழ்ச்சி.. அல்லு அர்ஜுன் கைதாக காரணம்

Allu Arjun : நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதற்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது அல்லு அர்ஜுன் முன் அறிவிப்பின்றி வந்ததால் கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த செய்தி அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது சினிமா உலகில் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதோடு கைது செய்யப்பட்ட அன்றே அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைத்தும் அவர் மறுநாள் காலையில் தான் விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் மற்றும் நடிகைகள் பல நேரில் வந்து சந்தித்திருந்தனர். இந்நிலையில் அல்லு அர்ஜுன் கைதுக்கு காரணம் கட்சி மற்றும் ஜாதி தான் என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.

அதாவது பல கூட்டங்களில் நெரிசல் காரணமாக உயிரிழந்த சம்பவங்கள் ஏற்பட்டாலும் அல்லு அர்ஜுன் கைதிக்கு சில காரணங்கள் இருக்கிறது. அதாவது சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் மற்றும் அல்லு அர்ஜுன் இடையே பிரச்சனை இருக்கிறது.

அல்லு அர்ஜுன் கைதுக்கு பின்னால் உள்ள காரணம்

அல்லு அர்ஜுனின் சின்ன மாமா தான் பவன் கல்யாண். இவர்கள் இருவருக்குள் அடிக்கடி ஒரு போரே போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் அல்லு அர்ஜூனின் மனைவி வேறொரு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த சமூகத்திற்கு ஆதரவாக தொடர்ந்து அல்லு அர்ஜுன் குரல் கொடுத்து வருகிறார். கட்சி மற்றும் ஜாதி ஆகியவற்றில் பிரிந்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.

அதோடு சினிமாவில் அவரது வளர்ச்சி அபரிவிதமாக இருந்து வருகிறது. இந்த சமயத்தில் மனரீதியாக அல்லு அர்ஜுனுக்கு பிரச்சனை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் இருவரும் அல்லு அர்ஜுனுக்கு எதிராக இருக்கின்றனர்.

அதனால் தெலுங்கானா அரசுக்கு அழுத்தம் கொடுத்து அல்லு அர்ஜுனை கைது செய்ய வைத்துள்ளனர். இது சொந்தத்தால் நடந்த சூழ்ச்சி தான் என வலைப்பேச்சு அந்தணன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

Trending News